Steven Smith Retirement: நேற்று தோல்வி! இன்று ஓய்வு.. ஒரு நாள் போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித் ஓய்வு
Steven Smith Retirement : துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டிதான் அவர் கடைசியாக விளையாடிய போட்டியாகும்.

2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்மித் ஓய்வு:
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டிதான் அவர் கடைசியாக விளையாடிய போட்டியாகும். அந்த போட்டியில் அவர் ஆஸ்திரேலியாவுக்காக அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார்.
35 வயதான இவர் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 43.28 சராசரியுடன் 5800 ரன்கள் மற்றும் 86.96 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார், இதில் 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த 12வது வீரராக ஸ்மித் உள்ளார். 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக 164 ரன்கள் என்கிற தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். லெக்ஸ்பின்னிங் ஆல்ரவுண்டராக அறிமுகமான இவர், 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 90 கேட்சுகளையும் எடுத்துள்ளார்.
அரையிறுதி போட்டிக்கு பிறகு ஓய்வு:
அரையிறுதிப் போட்டித் தோல்விக்குப் பிறகு ஸ்மித் தனது அணி வீரர்களிடம் உடனடியாக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறியதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஊடகக் குறிப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். "இது ஒரு சிறந்த பயணமாக இருந்தது, அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்திருக்கிறேன்," என்று ஸ்மித் கூறினார். "பல அற்புதமான நேரங்களும் அற்புதமான நினைவுகளும் இருந்தன. இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது பயணத்தைப் பகிர்ந்து கொண்ட பல அற்புதமான அணி வீரர்களுடன் சேர்ந்து ஒரு சிறந்த சிறப்பம்சமாகும்.
இதையும் படிங்க: IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
"2027 உலகக் கோப்பைக்குத் வருகிறது அதற்காக மற்ற வீரர்கள் தயாராக இப்போது ஒரு சிறந்த வாய்ப்பு, எனவே இதுவே சரியான நேரமாக உணர்கிறது," என்று அவர் மேலும் கூறினார். "டெஸ்ட் கிரிக்கெட் ஒரு முன்னுரிமையாகவே உள்ளது, மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் தொடர் மற்றும் சொந்த மண்ணில் இங்கிலாந்து உடனான ஆஷஸ் தொடர் ஆகியவற்றை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அந்த போட்டிகளில் நான் இன்னும் நிறைய பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்."
கேப்டனாக ஸ்மித்
2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணியில் ஸ்மித் ஒரு பகுதியாக இருந்தார், மேலும் மைக்கேல் கிளார்க் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து 50 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் ஆஸ்திரேலியாவை 64 போட்டிகளில் வழிநடத்தினார், 32 போட்டிகளில் வெற்றி பெற்றார், 28 போட்டிகளில் தோல்வியடைந்தார், நான்கு போட்டிகளில் எந்த முடிவும் இல்லை. சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் காயமடைந்த தற்போதைய கேப்டன் பேட் கம்மின்ஸுக்குப் பதிலாக. இடைக்கால அடிப்படையில் அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: 36 வயது கோலி... வயதானலும் தீராத ரெக்கார்ட் தாகம்.. அரையிறுதியில் இந்திய வீரர்களின் சாதனை!
ஜார்ஜ் பெய்லி கருத்து:
ஸ்மித்தின் முடிவு குறித்து தேர்வுக்குழுத் தலைவரான ஜார்ஜ் பெய்லி கூறுகையில், "ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஸ்டீவின் முடிவை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு ஆதரிக்கிறோம். ஸ்டீவ் பல சந்தர்ப்பங்களில் தனது மீதமுள்ள விளையாட்டு வாழ்க்கையை ஒவ்வொரு தொடராக அணுகுவதாகக் கூறியுள்ளார், இந்த நிலைப்பாடு மாறவில்லை, மேலும்அவரின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆதரிக்கிறது.
"167 போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனாக அவரது சாதனை முன்மாதிரியானது, மேலும் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றவராக இந்த வடிவத்தை விட்டு வெளியேறுவது சிறந்த ஆஸ்திரேலிய ஒருநாள் வீரர்களில் ஒருவராக அவரது பாரம்பரியத்தை உறுதிப்படுத்துகிறது, ஸ்டீவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறார், மேலும்அவர் அணியின் ஒருங்கிணைந்த வீரராகவும் தலைவராகவும் இருக்கிறார்."





















