Shami Performance: விமர்சனம் ஒருபுறம்... விளையாட்டு மறுபுறம்... எதில் சறுக்குகிறார் ஷமி? ஆராயும் ABP நாடு!
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில், 14 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஷமி, 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் தொடரை அடுத்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கோப்பையை வெல்லும் ரேஸில் இந்திய அணி முந்திச்செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர் 12 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து என இரு முக்கிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை இழந்து அரை இறுதிக்கு தேர்ச்சி பெறுவதற்கான ரேஸில் எதிர்ப்பாராதவிதமாக பின் தங்கியுள்ளது.
இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இருக்கும் வீரர்களின் ஐபிஎல் பர்ஃபாமென்ஸ் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, அடுத்த மூன்று போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் ஆகியவற்றை பற்றிய நச் அலசல் இதோ!
முகமது ஷமி:
vs பாகிஸ்தான், துபாய் கிரிக்கெட் மைதானம் ; 3.5-45-0
vs நியூசிலாந்து, துபாய் கிரிக்கெட் மைதானம் ; 1-11-0
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி 18வது ஓவரின் கடைசி பந்திலே எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக, 18 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது 18வது ஓவரை வீசிய முகமது ஷமி வீசிய முதல் 5 பந்திலே பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதனால், நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு ஆளானார். அதனை அடுத்து நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில், ஷமிக்கு ஒரு ஓவர்தான் வழங்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் முகமது ஷமி: கடைசி ஐந்து போட்டிகளில்:
vs சென்னை சூப்பர் கிங்ஸ் | துபாய் | 4-22-1 |
vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு | ஷார்ஜா | 4-39-3 |
vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | துபாய் | 4-23-1 |
vs மும்பை இந்தியன்ஸ் | அபு தாபி | 4-42-1 |
vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | ஷார்ஜா | 4-14-2 |
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில், 14 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஷமி, 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். டெத் ஓவர்கள் வீசக்கூடிய, போட்டிகளை வென்று தரக்கூடிய பர்ஃபாமென்ஸ்களை அவ்வப்போது ஷமி வெளிப்படுத்தி இருக்கிறார். ஷமி போன்ற மேட்ச் வின்னர்களை இந்திய அணியில் எடுப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், ஒரு நாள், ஒரு போட்டியில் சொதப்பியதற்காக அவரை மட்டம்தட்டுவதை ஏற்க முடியாததாகவே உள்ளது. எனினும் இரண்டு போட்டிகளில், பும்ரா மட்டுமே விக்கெட் எடுத்திருக்கும் நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சும் பந்துவீச்சாளர்கள் திணறியே வருகின்றனர். இனி மீதம் இருக்கும் மூன்று போட்டிகளில், டாஸ் முடிவை பொருத்து, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை பார்ப்போம்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்