WATCH VIDEO : மழையில் சறுக்கிய ஷகிப்... டெஸ்ட் தொடரில் எடுத்த ரெஸ்ட்!
2வது நாள் டாக்கா டெஸ்டில் மழை குறுக்கீட்டின்போது வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப்- அல்- ஹாசன் மழைநீரில் விளையாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி 20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் பாகிஸ்தான் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்த டி 20 தொடரில் 3-0 என்ற கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் வங்காளதேச அணியை பந்தாடிய பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் தொடக்க வீரர்களாக அபித் அலி மற்றும் அப்துல்லா களமிறங்கினர். ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபித் அலி 39 ரன்களிலும், அப்துல்லா 25 ரன்களிலும் அவுட்டாகி நடையைக்கட்டினர்.
அடுத்து களமிறங்கிய அசார் அலி மற்றும் கேப்டன் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் நாள் ஆட்டநாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. 2 வது நாள் தொடக்கம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அன்றைய நாளில் வெறும் 6.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கீட்டு காரணமாக இரண்டாவது நாள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், மைதானத்தில் மழையின்போது பிட்ச் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் சீட் கொண்டு மூடப்படும். அதில், வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப்- அல்- ஹாசன் மழையில் தேங்கிய நீரில் சறுக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வயது எவ்வளவு ஆனால் என்ன மழை என்றால் அனைவரும் குழந்தையே என்ற வார்த்தை இங்கு நிரூபணம் ஆகிறது.
Excitement when the play is officially called off for the day @Sah75official 😂🏏 #BANvPAK pic.twitter.com/4ewyRqM23u
— Sikandar Bakht (@ImSikandarB) December 5, 2021
ஷகிப் அல் ஹசன் முதல் டெஸ்டின்போது தொடை காயம் காரணமாக விளையாடவில்லை. முதல் டெஸ்டைத் தவறவிட்ட பிறகு மீண்டும் 2 வது டெஸ்டில் களமிறங்கினார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மைதானத்தில் ஓடுவதும் டைவிங் போன்ற சேட்டைகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்