மேலும் அறிய

SA Vs ENG Score LIVE: டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - தென்னாப்ரிக்கா அணி நிர்ணயிக்கப் போகும் இலக்கு என்ன?

SA Vs ENG Score LIVE: தென்னாப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

LIVE

Key Events
SA Vs ENG Score LIVE: டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து -  தென்னாப்ரிக்கா அணி நிர்ணயிக்கப் போகும் இலக்கு என்ன?

Background

SA Vs ENG World Cup 2023: தர்மசாலாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின்  20வது லீக் போட்டியில், தென்னாப்ரிக்கா அணியை நடப்பு சாம்பியனான இங்கிலாந்து எதிர்கொள்கிறது

உலகக் கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 18 லீக்  போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா, புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

தென்னாப்ரிக்கா - இங்கிலாந்து மோதல்:

இமாச்சல பிரதேச மாநிலம்  தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதுவரை விளையாடிய முதல் 3 லீக் போட்டிகளிலும் தென்னாப்ரிக்க அணி இரண்டில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,  இங்கிலாந்து அணி 2 தோல்வி மற்றும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. அரையிறுதிக்குச் செல்ல அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி அவசியம். இதனால்,  இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் & பலவீனங்கள்:

தென்னாப்ரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அந்த அணியின் முக்கிய பலமாக இருக்க, பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்து வருகின்றனர். அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.  குறிப்பாக முன்னாள் கேப்டன் டிகாக், அந்த அணியின் பேட்டிங் தூணாக ஜொலிக்கிறார்.  அதேநேரம், கடைசி போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியுற்றது குறிப்பிடத்தகக்து.  மறுமுனையில் அனுபவம் வாய்ந்த மற்றும் அனுபவமிக்க வீரர்கள் இங்கிலாந்து அணியில் நிறைந்து இருந்தாலும், களத்தில் அவர்கள் இதுவரை தங்களது திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இன்றைய போட்டியில் அவர்கள் வெல்ல வேண்டுமானால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தங்களது முழு திறனை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. கடைசியாக விளையாடிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வி கண்டது குறிப்பிடத்தகக்து.

நேருக்கு நேர்:’

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 69 முறை நேருக்கு நேர் மோதியுள்ன. இதில் இங்கிலாந்து அணி 30 போட்டிகளிலும், தென்னாப்ரிக்கா அணி 33 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிய, 5 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

மைதானம் எப்படி?

தர்மசாலா மைதானம் தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், நேரம் செல்ல செல்ல இது பந்துவீச்சிற்கு சாதகமாக மாறக்கூடும். இதனால், பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.

உத்தேச அணி விவரங்கள்:

தென்னப்ரிக்கா:

குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி

இங்கிலாந்து:

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ( கேப்டன் ), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி, கஸ் அக்டின்சன்

13:44 PM (IST)  •  21 Oct 2023

இலங்கை பிளேயிங் லெவன்

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ரீஸ் டாப்லி

13:43 PM (IST)  •  21 Oct 2023

தென்னாப்ரிக்கா கேப்டன் அணியில் இல்லை

காயம காரணமாக தென்னாப்ரிக்கா கேப்டன் பவுமா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மார்க்ரம் கேப்டனான செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13:41 PM (IST)  •  21 Oct 2023

தென்னாப்ரிக்கா பிளேயிங் லெவன்

ரீசா ஹென்ட்ரிக்ஸ். குயின்டன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென். ஐடன் மார்க்ரம் (கேப்டன்). ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா. கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி நிகிடி

13:37 PM (IST)  •  21 Oct 2023

தென்னாப்ரிக்கா அணி பேட்டிங்

தர்மசாலாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தென்னாப்ரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget