Rohit sharma Performance: படுமோசமான ஃபார்ம்... எப்படி தேர்வானார் ரோஹித் சர்மா? ஆராயும் ABP நாடு!
ஐபிஎல் தொடரின் கடைசி ஐந்து போட்டிகளிலும் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார் என்பது தரவுகளின் அடிப்படையில் தெளிவாக தெரிகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சூப்பர் 12 போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இம்முறை டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி போட்டிகளில் யுஏஇயில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையும் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் யுஏஇ ஐபிஎல் போட்டிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் உலகக் கோப்பை போட்டி செயல்பாடுகள் என்னென்ன?
ரோகித் சர்மா:
இந்திய கிரிக்கெட் அணியில் டி20 போட்டிகளில் 2007ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மா களமிறங்கி வருகிறார். இவர் தொடக்கத்தில் மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்தாலும் அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருகிறார். இவர் ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருகிறார்.
ஐபிஎல் 2021- யுஏஇயில் கடைசி 5 போட்டிகள்:
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி யுஏஇயில் நடைபெற்றது. அதில் கடைசி 5 போட்டிகள் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள்
போட்டி |
மைதானம் |
ரன்கள் |
ராயல் சேலஞ்சர்ஸ் |
துபாய் |
43 (28) |
பஞ்சாப் கிங்ஸ் |
அபுதாபி |
8(10) |
டெல்லி கேபிடல்ஸ் |
ஷார்ஜா |
7(10) |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
ஷார்ஜா |
22(13) |
சன்ரைசர்ஸ் |
அபுதாபி |
18(13) |
டி20 உலகக் கோப்பை:
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது வரை விளையாடியுள்ளது. இதில் ரோகித் சர்மா முதல் போட்டியிலும் ரன் எதுவும் எடுக்காமலும் இரண்டாவது போட்டியில் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தார். குறிப்பாக நியூசிலாந்து போட்டியில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. மூன்றாவது வீரராக களமிறங்கினார். 2013ஆம் ஆண்டிற்கு பிறகு ரோகித் சர்மா மூன்றாவது முறையாக நேற்று தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை.
போட்டி |
மைதானம் |
ரன்கள் |
பாகிஸ்தான் |
துபாய் |
0 (1) |
நியூசிலாந்து |
துபாய் |
14(14) |
ஐபிஎல் தொடரின் கடைசி ஐந்து போட்டிகளிலும் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார் என்பது தரவுகளின் அடிப்படையில் தெளிவாக தெரிகிறது. எப்படி இவர் அணியில் தேர்வானார் என்கிற கேள்வியும் எழுகிறது. ஆனாலும் சீனியர் என்கிற காரணத்தை பிசிசிஐ தூக்கி வரும். ஆனால், இங்கு சீனியர் தேவையில்லை... பிளேயர் தான் தேவை! காரணம், இது நாட்டின் பெருமை சார்ந்த விசயம்!