Rohit Sharma: இவ்ளோ கோபமா..! கேட்ச் விட்ட சர்ஃப்ராஸ் கான், மைதானத்திலேயே அடித்த ரோகித் சர்மா..! வீடியோ வைரல்
Rohit Sharma: பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் வாய்ப்பை விட்ட சர்ஃப்ராஸ் கானை, ரோகித் சர்மா மைதானத்திலேயே அடித்துள்ளார்.
Rohit Sharma: பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் வாய்ப்பை விட்ட சர்ஃப்ராஸ் கானை, ரோகித் சர்மா அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பும்ரா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள கேப்டன் ரோகித் சர்மா தலைமையில், இந்திய அணி டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் நடைபெற உள்ள டெஸ்டில் களமிறங்க உள்ளது. இதற்கு தயாராகும் விதமாக, கான்பெராவில் உள்ள மனுகா ஓவலில் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
கேட்ச் விட்ட சர்ஃப்ராஸ்.. மைதானத்திலேயே அடித்த ரோகித்
போட்டியில் முதலில் களமிறங்கிய பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணி, 240 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. விளையாட்டின் போது, ரிஷப் பண்டிற்கு மாற்றாக சர்ஃப்ராஸ் கான் விக்கெட் கீப்பர் பணியை செய்தார். அப்போது, இன்னிங்ஸின் 23 வது ஓவரில் ஜாக் கிளேட்டன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, பிறகு பேட்டிங் செய்ய வந்த ஆலிவர் டேவிஸிற்கு ஹர்ஷித் ராணா ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். அது பேட்டில் எட்ஜ் வாங்கி, விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால், சர்ஃப்ராஸ் கான் கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். தொடர்ந்து கீழே கிடந்த பந்தை எடுக்க முயன்றார். அப்போது அருகிலிருந்த ரோகித் சர்மா, ஏம்பா இந்த கேட்ச்சையேல்லாமா நழுவவிடுவாய் என்ற பாணியில் நகைச்சுவையாக சர்ஃப்ராஸ் கானின் முதுகில் குத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rohit 🤣 pic.twitter.com/ivusxzLlhh
— Abhi (@CoverDrive001) December 1, 2024
சர்ஃப்ராஸ் கான் கேட்ச்சை விட்டாலும், டேவிஸ் அடுத்த பந்திலேயே டக் ஆக ஆட்டமிழந்தார். ராணா வீசிய பந்துவீச்சில் கிளீன் போல்டானார். முன்னதாக, கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் எதுவும் நடைபெறாததால் இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெற்ற போட்டியில் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.