மனைவியை கூட்டி வரக்கூடாதா? - கேள்வி கேட்ட பத்திரிகையாளர்: டென்சனான ரோகித் சர்மா!
இந்திய வீரர்களின் மனைவிகள் முழு சுற்றுப்பயணத்திலும் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நியூசிலாந்திற்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிர்ச்சியூட்டும் ஒயிட்வாஷ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெளிநாட்டு தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு புதிய புதிய கட்டுப்பாடுகளை வகுத்ததாக செய்திகள் வெளியாகின.
பிசிசிஐ அதிகாரிகள், கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு இடையேயான மறுஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அதன்படி, ”இந்திய வீரர்களின் மனைவிகள் முழு சுற்றுப்பயணத்திலும் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது 45 நாட்களுக்கு மேலாக இருக்கும் வீரர்களுடன் இரண்டு வார காலம் வரை குடும்பத்தினர் இருக்கலாம்.
பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்புகள், விளம்பரங்கள் போன்றவற்றில் வீரர்கள் இருக்க வேண்டும்.
அனைத்து வீரர்களும் திட்டமிட்ட பயிற்சிகளில் முழு நேரமும் அணியினருடன் இருக்க வேண்டும். வெளியேயும் ஒன்றாக பயணிக்க வேண்டும்.
வீரர்கள் அணியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட குறிப்பிட்ட அளவிலான உடைமைகளை கொண்டு செல்ல வேண்டும். அதிகப்படியான பொருட்களின் செலவுகளை தனிப்பட்ட வீரர் ஏற்க வேண்டும்.
ஒழுக்கம் மற்றும் குழு ஒற்றுமையைப் மேம்படுத்த குடும்பங்களுடன் தனியாக செல்வதற்கு அனுமதியில்லை” போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகினர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது திடீரென டென்சனான ரோகித் “இந்த விதிகளை பற்றி யார் கூறியது? அது அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து வெளியானதா? அது முதலில் வரட்டும். அப்புறம் நாம் பேசுவோம்” என பதிலலித்தார். உடனே உடன் இருந்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ரோகித் சர்மாவை சமாதானப்படுத்தினார்.

