மேலும் அறிய

Watch Video: "இப்போ என்ன நான் பண்றது..." டாஸ் வென்றதும் தலையை சொறிந்து குழம்பிய ரோகித் - சிரித்த நியூசி. கேப்டன்

நியூசிலாந்து அணி உடனான போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, என்ன செய்வது என தெரியாமல் முழித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் 

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில்  கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 50 ஓவர்களில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்துடன் 349 ரன்கள் குவித்த போதும் போராடியே வெற்றி பெற்றது. 

இன்று 2வது போட்டி 

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரை இழக்கக்கூடாது என நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டி வருகிறது.

டாஸ் வென்ற ரோகித்:

போட்டிக்காக டாஸ் போட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நியூசிலாந்தி அணியின் கேப்டன் லாதம் ஆகியோர் மைதானத்திற்கு வருகை தந்தனர். கமெண்ட்ரி பாக்ஸில் இருந்த ரவி சாஸ்திரி அறிவிக்க, போட்டியின் ரெஃப்ரி ஜவகல் ஸ்ரீநாத் முன்னிலையில் ரோகித் சர்மா நாணயத்தை சுண்டினார். லாதம் தலை என சொல்ல, நாணயத்தில் பூ விழுந்தது. 

தலையை சொறிந்த ரோகித்

இதையடுத்து, ரோகித் சர்மாவிடம் பேட்டிங்கா? பவுலிங்கா? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ”அது வந்து நாங்கள் என்ன செய்ய போகிறோம்... என்ன செய்ய போகிறோம் என்றால்..” என சற்று நேரம் தலைமீது கை வைத்து யோசிக்க தொடங்கி விட்டார். இதனால் லாதம் மட்டுமின்றி, அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த சக இந்திய வீரர்களும், அங்கு நடப்பதை கண்டு சிர்த்து விட்டனர். பின்னர் ஒரு வழியாக ”பந்துவீச.. ஆமாம் நாங்கள் பந்துவீச போகிறோம்”  என ரோகித் சர்மா உறுதிப்படுத்தினார்.

தடுமாறும் நியூசிலாந்து:

ரோகித் சர்மாவின் இந்த செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் ரோகித் சர்மாவை கிண்டலடித்தும், நகைச்சுவையாக மீம்ஸ் போட்டும் வருகின்றனர். இதனிடையே, முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 15 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த, பிலிப்ஸ் மற்றும் பிரேஸ்வெல் நிதானமாக விளையாடினர். ஆனால், பிரேஸ்வெல்லும் 22 ரன்கள் எடுத்திருந்த போது, ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில், ஷமி 3 விக்கெட்டுகளையும், சிராஜ், தாகூர் மற்றும் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
Embed widget