Rishabh Pant Record: முதலில் சதம்.. அடுத்து அரைசதம்.. விக்கெட் கீப்பர் சாதனைப் பட்டியலில் இணைந்த ரிஷப் பண்ட்
முதல் இன்னிங்ஸில் சதம் கடந்த ரிஷப் பண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது அரைசதம் விளாசியுள்ளார்.
![Rishabh Pant Record: முதலில் சதம்.. அடுத்து அரைசதம்.. விக்கெட் கீப்பர் சாதனைப் பட்டியலில் இணைந்த ரிஷப் பண்ட் Rishabh Pant Test Record Second Indian Wicket Keeper Score Century Fifty Same Test India vs England 5th Test Rishabh Pant Record: முதலில் சதம்.. அடுத்து அரைசதம்.. விக்கெட் கீப்பர் சாதனைப் பட்டியலில் இணைந்த ரிஷப் பண்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/04/7b4c6e7eaa1a083d55b9f9c77babeb581656931316_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது.
இதில் சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 66 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஒரே டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம் கடந்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக 1973ஆம் ஆண்டு ஃபரூக் எஞ்சினியர் மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 121 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு பின்பு தற்போது ரிஷப் பண்ட் இரண்டாவது விக்கெட் கீப்பராக இந்தச் சாதனையை படைத்துள்ளார்.
ஒரே டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம் கடந்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:
ஃபரூக் எஞ்சினியர்- 121 & 66 (மும்பை)(1973)
ரிஷப் பண்ட்- 146 & 57(எட்ஜ்பாஸ்டன்)(2022)
அரைசதம் கடந்திருந்த ரிஷப் பண்ட் 57 ரன்களில் ஜேக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதன்மூலம் ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:
230 (192 & 38) புத்தி குந்திரேன் v இங்கிலாந்து (சென்னை) (1964)
224 (224 & பேட்டிங் செய்யவில்லை) தோனி v ஆஸ்திரேலியா (சென்னை) (2013)
203 (146 & 57) ரிஷப் பண்ட் v இங்கிலாந்து (எட்ஜ்பாஸ்டன்) (2022)
187 (121 & 66) ஃபரூக் எஞ்சினியர் v இங்கிலாந்து மும்பை (1973)
இந்திய சற்று முன்பு வரை 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி 333 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)