Rishab Pant Urvashi Contoversy: பிரபல வீரர் ரிஷப்பண்ட் லெஜண்ட் நாயகி ஊர்வசி இன்ஸ்டாவில் மோதல்..! நடந்தது என்ன..?
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்டிற்கும், பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரட்டேலாவிற்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் ரிஷப்பண்ட். இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரட்டேலாவிற்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும், அடுத்த கேப்டன் பெயர்கள் பட்டியலில் இருக்கும் முக்கிய வீரர் ரிஷப்பண்ட். இவர் பாலிவுட் நடிகையும், லெஜண்ட் படத்தின் நாயகியான ஊர்வசி ரட்டேலாவிற்காக காதலித்து வந்ததாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், நடிகை ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் மிஸ்டர் ஆர்.பி. எனக்காக இரவு முழுவதும் காத்திருந்ததாக கூறினார். அவரது பேட்டியில் பெயர் கூறாவிட்டாலும், மிஸ்டர் ஆர்.பி. என்பது ரிஷப்பண்டையே மறைமுகமாகவே குறிப்பிட்டிருந்ததாக அனைவரும் கருதினர்.
மேலும் படிக்க : Sachin: சதங்களின் நாயகன் சச்சின் முதல் சதம் அடித்த தினம் இன்று தான்!
அவரது பேட்டிக்கு பதிலடி தரும் விதமாக, ரிஷப்பண்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலர் விளம்பரம் தேடவும், தலைப்புச் செய்தியாக மாறவும் பொய் கூறுவது காமெடியாக இருக்கிறது என்று பதிவிட்டார். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
ரிஷப்பண்டின் பதிவிற்கு பதில் தரும் விதமாக, நடிகை ஊர்வசி ரிஷப்பண்டை கேலி செய்து, “ சின்ன தம்பி பேட், பால் விளையாடனும். நீங்கள் அசிங்கப்படுத்த நான் ஏமாறமாட்டேன்” என்றார். ஊர்வசியின் இந்த பதிவு ரிஷப்பண்டை தான் குறிக்கிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்.
இவர்களின் மோதல் வலுவடைந்து வரும் நிலையில், ரிஷப்பண்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்திற்காக வருத்தப்படாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். ரிஷப்பண்டின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இணையம் முழுவதும் ரிஷப்பண்ட் – ஊர்வசி மோதல்தான் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : Dhoni: வெளிநாட்டு டி20 தொடர்களில் தோனி அங்கம் வகிக்க வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும்.. அது என்ன?
மேலும் படிக்க : Ross Taylor: 'மது அருந்தினோம்..ராஜஸ்தான் ராயல்ஸ் ஓனர் கன்னத்தில் அறைந்தார்' - அதிர்ச்சி தகவலை சொன்ன டெய்லர்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்