Rishabh Pant Health: விரைவில் ரிஷப் பண்ட்டிற்கு இரு இடங்களில் ஆபரேஷன்.. உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த பிசிசிஐ!
ரிஷப் பந்த் தனது முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் கிழிந்ததில் இரட்டை அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்” என தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 30 ம் தேதி இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தை தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து விமானம் மூலம் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “ரிஷப் பந்த் தனது முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் கிழிந்ததில் இரட்டை அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்” என தெரிவித்துள்ளது.
Second Medical Update – Rishabh Pant
— BCCI (@BCCI) January 4, 2023
More details here 👇👇https://t.co/VI8pWr54B9
முன்னதாக, நேற்று ரிஷப் பண்ட் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், “இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை மும்பைக்கு மாற்றுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்துள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வரும் ரிஷப், ஏர் ஆம்புலன்சில் மும்பைக்கு அழைத்து வரப்படுகிறார்.
அவர் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்படுவார், மேலும் அவர் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் தோள்பட்டை சேவையின் இயக்குனர் டாக்டர் டின்ஷா பர்திவாலாவின் நேரடி மேற்பார்வையில் இருப்பார். ரிஷாப் அறுவைசிகிச்சை மற்றும் தசைநார் கிழிதலுக்கான அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார், மேலும் அவரது மீட்பு மற்றும் மறுவாழ்வு முழுவதும் பிசிசிஐ மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
View this post on Instagram
ரிஷப்பின் மீட்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு வாரியம் எல்லா முயற்சிகளையும் எடுக்கும், மேலும் இந்த காலகட்டத்தில் அவருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும்.” என தெரிவித்திருந்தார்.
பிசிசிஐ குறிப்பிட்டுள்ள மருத்துவர் பர்திவாலா, இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்பட மற்ற விளையாட்டு வீரர்களுடனும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காயங்களின் தன்மையை கருத்தில் கொண்டு, பண்ட் குணமடைய நான்கு மாதங்களுக்கும் மேலாகும் என்றும், விளையாடுவதற்கு சுமார் 6 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.