Ravindra Jadeja: 600 விக்கெட்ஸ்..சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஜடேஜா புதிய சாதனை!
Ravindra Jadeja: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட் எடுத்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா வெற்றி:
மகாராஷ்டிரா, நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது.50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இந்திய பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்ஷர் படேல் மூவரும் தலா 1 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெரிதாக ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். ஷுப்மன் கில்லுடன் இணைந்த அக்ஷர் படேல் இருவரும் சிறப்பாக விளையாடினர். அக்ஷர் படேல் அரைசதம் அடித்தார். அவர் 47 பந்துகளில் 6 பவுண்ரி 1 சிக்ஸர் அடித்து 52 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.ஷுப்மன் கில் 96 பந்துகளில் 14 பவுண்டரிகள் அடித்து 87 ரன் எடுத்து சாக்யூப் மஹ்முத் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 38.4 ஓவரில் 251 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
6⃣0⃣0⃣ international wickets and counting!
— BCCI (@BCCI) February 6, 2025
Congratulations, Ravindra Jadeja 🫡🫡
Follow The Match ▶️ https://t.co/lWBc7oPRcd#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank | @imjadeja pic.twitter.com/Qej9oaRWbb
ரவீந்திர ஜடேஜா - 600 விக்கெட்:
இந்தப் போட்டியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் முறையே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இருவரும் புதிய சாதனையை படைத்தனர். ரவீந்திர ஜடேஜா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட் எடுத்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகிவிட்டார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் அனில் கும்ளே முதல் இடத்தில் உள்ளார். கபில் தேவ் -4வது இடத்தில் உள்ளார். இவர்களின் லிஸ்ட்டில் ஜடேஜாவும் சேர்ந்துவிட்டார்.
அதிக விக்கெட் எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்:
- அணில் கும்ளே- 953 விக்கெட்கள்
- ரவிச்சந்திரன் அஷ்வின் - 765 விக்கெட்கள்
- ஹர்பஜன் சிங் - 703 விக்கெட்கள்
- கபில் தேவ் - 687 விக்கெட்கள்
- ரவீந்திர ஜடேஜா - 600 விக்கெட்கள்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் (highest wicket-taker in India vs England ODIs) பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, பிரபல முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை முந்தி முதலிடத்தையும் பிடித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையே நாக்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 43வது ஓவரில் ’Jacob Bethell’ விக்கெட் எடுத்தபோது இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக மொத்தமாக 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
India vs England ODIs அதிக விக்கெட் எடுத்தவர்கள்:
- ரவீந்திர ஜடேஜா -42
- ஜேம்ஸ் ஆண்டர்சன் - 40
- ஆண்ட்ரூ ஃபிலின்டாஃப் (Andrew Flintoff) -37
- ஹர்பஜன் சிங் -36
- ஜவகல் ஸ்ரீநாத், ரவிச்சந்திரன் அஷ்வின் -35
சர்வதேச கிரிக்கெட்டில் கபில்தேவுக்குப் பிறகு, 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகளை எடுத்த 2-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.



















