Ranji Trophy 2024: அதிரவிட்ட அன்ஷூல் கம்போஜ்.. ஒரே இன்னிங்ஸ்சில் 10 விக்கெட்.. உற்றுநோக்கும் MI
Anshul Kamboj: ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஓரே இன்னிங்ஸ்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3வது வீரர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் அன்ஷுல் கம்போஜ்
ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஓரே இன்னிங்ஸ்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3வது வீரர் என்ற புகழுக்கு சொந்தகாரர் ஆகியுள்ளார் ஹரியானா வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ்
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்:
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஹரியானாவின் 23 வயது வேகப்பந்து வீச்சாளார் அன்ஷுல் கம்போஜ் ஓரே இன்னிங்ஸ்சில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஹரியானவின் லாலி பகுதியில் உள்ள சவுத்ரி பான்சி லால் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைப்பெற்றது. முதலில் கேரள அணி பேட்டிங் செய்து 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் கேரள அணியின் 10 விக்கெட்களையும் அன்ஷூல் கம்போஜ் கைப்பற்றினார்.
மூன்றாவது வீரர்:
39 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை அன்ஷுல் கம்போஜ் படைத்துள்ளார்,இதற்கு முன்பு 1956-57 ஆண்டு ராஜஸ்தான் அணியை சேர்ந்த பிரம்மாங்சு சாட்டர்ஜியும், 1985-86 ஆம் ஆண்டு ராஜஸ்தான் வீரர் பிரதீப் சுந்தரம் இந்த சாதனையை படைத்துள்ளனர். ஓட்டுமொத்தமாக முதல் தர போட்டிகள் 10 விக்கெட்களை கைப்பற்றிய 6வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகள் என்ற இந்த மைல்கல் கடந்த 12 மாதங்களில் காம்போஜின் மற்றொரு சாதனையாகும். விஜய் ஹசாரே கோப்பையை வென்ற ஹரியானா அணி கட்டுக்கோப்பாக வீசி பத்து போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதில் தமிழ்நாட்டிற்கு எதிரான அரையிறுதியில் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
1⃣ innings 🤝 1⃣0⃣ wickets 👏
— BCCI Domestic (@BCCIdomestic) November 15, 2024
Historic Spell 🙌
3⃣0⃣.1⃣ overs
9⃣ maidens
4⃣9⃣ runs
1⃣0⃣ wickets 🔥
Watch 📽️ Haryana Pacer Anshul Kamboj's record-breaking spell in the 1st innings against Kerala 👌👌#RanjiTrophy | @IDFCFIRSTBank pic.twitter.com/RcNP3NQJ2y
அடுத்ததாக நடந்த துலீப் கோப்பை போட்டியில் இந்தியா சி அணிக்காக ஆடிய ஓரே இன்னிங்சில் 08 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர், இந்த சிறப்பான எம்ர்ஜிங் ஆசிய கோப்பைட்யில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்கள் எடுத்திருந்தார்.
மும்பை ரேடாரில் கம்போஜ்:
கம்போஜின் இந்த சிறப்பான பந்துவீச்சினால் அவருக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை சென்ற ஏலத்தில் எடுத்தது. அவர் மும்பை அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார். அடுத்த ஐபிஎல் மெகா ஏலம் நடைப்பெற உள்ளது, அன்ஷூல் கம்போஜின் இந்த சிறப்பான பந்துவீச்சால் அவர் மீண்டும் மும்பை அணிக்கு செல்ல வாய்ப்புள்ளது. மும்பையிடம் இன்னும் ஒரு RTM உள்ள நிலையில் அதை அன்ஷூல் கம்போஜ்க்காக பயன்படுத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.