போதுமான அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு தண்ணீர் பாட்டில் சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்கிறோம். இதற்கிடையில் பாட்டில்களின் தூய்மை மிகவும் முக்கியமானது. கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிக விரைவாக அழுக்காகிவிடும்.
அசுத்தமான தண்ணீர் பாட்டில்களால் பல நோய்கள் வர வாய்ப்புண்டு. இதை தவிர்க்க தண்ணீர் பாட்டில்களை சுத்தபடுத்துவதற்கான சரியான முறையை பாட்டிலில் தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும்
கொதிக்க வெத்து தண்ணீரை பாட்டிலில் ஊற்றி பாத்திரம் கழுவும் சோப்பு தண்ணீரை சில துளிகள் சேர்த்துக்கொண்டு நன்றாக பாட்டிலை குளுக்கி 2-4 நிமிடங்கள் வரை வைத்துவிடவும்.
பாட்டில் சுத்தம் செய்யும் பிரஷ் நல்ல சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும். பாட்டிலின் மூடியிலும் இருக்கும் அழுக்கை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
தண்ணீர் பாட்டில்களை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். எலுமிச்சை பழம், கல் உப்பு சேர்த்து ஊற வைத்து கழுவலாம்.
பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்து மூடிதிறந்து காய வைக்கவும்.
கண்ணீர் அரை கப் வினீகருடன் ஒரு தேய்க்கரண்டி ப்ளீச் மற்றும் குளிர்ந்த நீரையும் கலது பாட்டிலில் ஊற்றி நன்றாக குளுக்கி ஓர் இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும்.
மாதத்தில் மூன்று முறையாவது பாட்டில்களை சுத்தம் செய்ய வேண்டும்.