Babar Azam: உலகக்கோப்பை தொடரின்போது கண் கலங்கிய பாபர் அசாம்... ரஹ்மனுல்லா குர்பாஸ் சொன்ன தகவல்! விவரம் இதோ!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியின் தோல்வியால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கண் கலங்கியதாக ரஹ்மனுல்லா குர்பாஸ் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை 2023:
ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது.
கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் அணி, இந்த தொடரில் சிறப்பாக விளையாடியது. அந்த வகையில், இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளை பின்னுக்குத்தள்ளி, புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தை பிடித்தது ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி. அந்த வகையில், 9 லீக் போட்டிகளில் விளையாடிய அந்த அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தாலும், 4 போட்டிகளில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரில் இந்த அளவிற்கு ஆப்கானிஸ்தான் அணி விளையாடியதை அந்நாட்டு ரசிகர்களின் மட்டும் இன்றி இந்திய ரசிகர்களும் கொண்டாடினார்கள். இதனிடையே பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து வெளியேறியது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி:
முன்னதாக, கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்கள் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.
கண்கலங்கிய பாபர் அசாம்:
இந்நிலையில், தான் அந்த போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ரஹ்மனுல்லா குர்பாஸ் தற்போது பேசியுள்ளார். அதில், “பொதுவெளியில் இதை பேசலாமா என்று தெரியவில்லை. நாங்கள் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பின்னர் பாபர் அசாம் கண்ணீர் விடும் தருவாயில் இருந்தார். அதோடு அழுதுவிடக்கூடாது என்பதிலும் அவர் தீவிரமாக இருந்தார்.
இப்படி பாபர் அசாம் போன்ற ஒரு வீரர் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்து நான் பார்த்ததே கிடையாது. இருந்தாலும் அவர் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருந்தார்.அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. பின்னர் போட்டிக்கு பிறகு நான் அவரிடம் பரிசாக அவருடைய ஒரு பேட்டை கேட்டேன்.
அதன்பிறகு அவரும் எனக்காக ஒரு பேட்டை கொண்டு பரிசளித்தார். என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் மற்றும் கேப்டன்களில் அவரும் ஒருவர்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Sreesanth: உங்களுக்கு என்னதான் பிரச்சனை... கடவுள் உங்கள மன்னிக்கவே மாட்டாரு... கம்பீரை சாடிய ஸ்ரீசாந்த்!
மேலும் படிக்க: Dhoni CSK : தோனி இடத்துக்கு இவர்தான் சரியான ஆளு.. தமிழக வீரரை தட்டித்தூக்க காத்திருக்கும் சிஎஸ்கே! விவரம் இதோ!