Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவாகரத்து - இளம் நடிகையை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்
Shoaib Malik: இந்திய டென்னிஸ் வீராங்கனையிடம் இருந்து விவாகரத்து பெற்ற பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்துள்ளார்.
முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் இருந்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் விவாகரத்து பெற்றுவிட்டார் என்ற தகவல்களுக்கு மத்தியில், நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்துள்ளார்.
சானியா மிர்சாவை பிரிந்த சோயப் மாலிக்:
முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும், அவருடன் விளம்பரப் படங்களில் நடித்த பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. இதனால், கணவர் சோயப் மாலிக்கை விட்டு இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் தான், 41 வயதான சோயப் மாலிக், 30 வயதான சனா ஜாவத்தை திருமணம் செய்து அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
மூன்றாவது திருமணம் செய்த சோயப் மாலிக்:
ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஆசியரியராக பணியாற்றி வந்த ஆயிஷா சித்திக் என்பவரை, கடந்த 2002ம் ஆண்டு சோயப் மாலிக் திருமணம் செய்து கொண்டார். 8 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2010ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். விவாகரத்து வாங்கிய அதே ஆண்டின் இறுதியில் அதே ஐதராபத்தில் பிறந்து வளர்ந்த இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் தான் சானியா மிர்சாவிடம் இருந்து பிரிந்து, நடிகை சனா ஜாவத்தை சோயாப் மாலிக் திருமணம் செய்துள்ளார். இதனிடையே, சனா ஜாவத், கடந்த 2020ம் ஆண்டு உமைர் ஜஸ்வால் என்ற பாடகரை திருமணம் செய்து இருந்தார். தற்போது அவரை விட்டு பிரிந்து சோயப் மாலிக்கை ஜாவத் கரம்பிடித்துள்ளார்.
சானியா போட்ட பதிவு:
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பாக சானிய மிர்சா சமூக வலைதளங்களில் போட்ட பதிவு தற்போது இணையத்தில் வைராகியுள்ளது. அதில், “திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. உங்கள் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள். உடல் பருமன் கடினமானது. பொருத்தமாக இருப்பது கடினம். உங்கள் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள். கடனில் இருப்பது கடினம். நிதி ரீதியாக ஒழுக்கமாக இருப்பது கடினம். உங்கள் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள். தொடர்பு கடினமாக உள்ளது. தொடர்பு கொள்ளாமல் இருப்பது கடினம். உங்கள் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமாக இருக்கும். ஆனால் நம் கடினமானதை நாம் தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.