Asia Cup 2025: Asia Cup 2025: “மன்னிச்சிடுங்க!” மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்! பிடிவாதமாக இருக்கும் இந்தியா!
Asia Cup 2025 Trophy: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Asia Cup 2025 Trophy: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆசிய கோப்பையில் நடந்தது:
ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால், வெற்றிக்கொண்டாட்டத்தின் போது இந்திய அணி கோப்பையை வாங்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்றால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமை பொறுப்பில் இருக்கும் மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், அந்த நாட்டு அமைச்சராகவும் செயலபட்டு வருகிறார். இதனால் இவரது கையால் கோப்பையை வாங்க இந்திய அணி திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
அதற்கு பதிலாக வேறு யாராவது கோப்பையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வேறு யாரை வைத்தும் கோப்பையை வழங்க முடியாது என்று அறிவித்தது. அதேபோல், நக்வி இந்திய வீரர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்க மறுத்து, கோப்பையை மைதானத்திலிருந்து எடுத்துச் செல்லுமாறு ஏ.சி.சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மன்னிப்பு கேட்ட நக்வி:
இச்சூழலில் தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமை பொறுப்பில் இருக்கும் மொஹ்சின் நக்வி இந்த சம்பவம் தொடர்பாக பிசிசிஐ-யிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஆசியக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு, கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி , "நமது நாட்டிற்கு எதிராகப் போர் தொடுக்கும் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரிடமிருந்து கோப்பையை இந்திய அணி ஏற்றுக்கொள்ள முடியாது" என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தான் மொஹ்சின் நக்வி பிசிசிஐ யிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “குழப்பத்திற்கு மன்னிக்கவும். ஆனால் கோப்பை வேண்டும் என்றால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு வாருங்கள்” என்றுஇ தெரிவித்துள்ளார். நவம்பரில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாநாட்டின் போது, நக்விக்கு எதிராக "தீவிரமான மற்றும் வலுவான" போராட்டம் நடத்தப்படும் என்று தேவஜித் சைகியா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.




















