T20 World Cup 2024: ஒரே நாடு ஒரே ஜெர்சி! காவி நிறத்தில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி சீருடை!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகமாகி உள்ளது.
டி20 உலகக் கோப்பை:
ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த லீக்கின் இறுதிப் போட்டி மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 20 அணிகள் பங்குபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தான் நடைபெறுகிறது.
இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடுகின்றன. அதன்படி இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அமெரிக்காவின் நியூயார்கில் நடைபெறுகிறது.
ஒரே ஜெர்சி..ஒரே நாடு:
முன்னதாக இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. அதன்படி ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு புதிய ஜெர்சி இன்று (மே 6) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை அடிடாஸ் தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதை பிசிசிஐ ரீ-போஸ்ட் செய்துள்ளது.
அதன்படி அந்த வீடியோவில் ஹெலிக்காப்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி பறக்கவிடப்பட்டிருக்கிறது. அதை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குல்தீப்யாதவ், ரவீந்திர ஜடேஜா பார்ப்பது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளது. ஒரே நாடு ஒரே ஜெர்சி என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
One jersey. One Nation.
— adidas (@adidas) May 6, 2024
Presenting the new Team India T20 jersey.
Available in stores and online from 7th may, at 10:00 AM. pic.twitter.com/PkQKweEv95
உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோகித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் , விராட் கோலி , சூர்யகுமார் யாதவ் , ரிஷப் பண்ட் , சஞ்சு சாம்சன் , சிவம் துபே , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் , யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் , அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் , ஜஸ்பிரித் பும்ரா
மேலும் படிக்க: IPL 2024: வாவ்! அந்த ஒரு கேட்ச்! ஜான்டி ரோட்சிடமே பாராட்டு வாங்கிய பால் பாய்!
மேலும் படிக்க: BAN vs IND 4th T20I: 300வது போட்டியில் களம் இறங்கிய இந்திய கேப்டன்! அதே போட்டியில் நடந்த மற்றொரு சுவாரஸ்யம்!