மேலும் அறிய

ODI World Cup Warm-up: மழைக்கு வாய்ப்பு..? பயிற்சி போட்டியில் வைக்குமா ஆப்பு..? இங்கிலாந்தை இன்று எதிர்கொள்ளும் இந்தியா..!

பயிற்சி ஆட்டத்தில் 11 வீரர்கள் மட்டுமே பேட்டிங் செய்தாலும், யார் வேண்டுமானாலும் எங்கும் பேட் செய்யலாம், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பந்து வீசலாம். 

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக விளையாடும் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி இன்று இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. 

இந்தப் போட்டியில், இரு அணிகளும் தங்களது சிறந்த பதினொன்று அணியுடன் களமிறங்கலாம். பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை 15 வீரர்களையும் அணிகள் களமிறக்கலாம். 11 வீரர்கள் மட்டுமே பேட்டிங் செய்தாலும், யார் வேண்டுமானாலும் எங்கும் பேட் செய்யலாம், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பந்து வீசலாம். 

இந்திய அணி எப்படி களமிறங்கும்..? 

டாப் ஆர்டரில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சுப்மன் கில் ஓப்பனிங் செய்வார். தொடர்ந்து, விராட் கோலி மூன்றாம் இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்திலும் களமிறங்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டநிலையில், உலகக் கோப்பையில் இதேபோல் விளையாடினால் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். அதேசமயம் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக ஐந்தாவது இடத்தில் காணலாம். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்திலும், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஏழாவது இடத்தில் இருப்பது உறுதி. 

 குல்தீப் யாதவா அல்லது அஷ்வினுக்கு வாய்ப்பான தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம். வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் விளையாடுவது உறுதி. எட்டாவது இடத்தில் உள்ள ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தொடர்பாக சிக்கல் ஏற்படும். அணி 8-வது இடத்தில் பேட் செய்ய ஒரு வீரரைத் தேடினால், ஷர்துலைத் தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம் பந்து வீச்சாளர் பார்வையில் அணி பார்த்தால் 

இன்றைய போட்டியில் மழை இருக்கா..? 

செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டி 50 முதல் 55 சதவீதம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இந்தியா-இங்கிலாந்து போட்டி எப்போது, ​​எங்கு நடைபெறும்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த பயிற்சி ஆட்டம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி பிற்பகல் 2:00 மணிக்கு தொடங்கும். 

இந்தியா-இங்கிலாந்து போட்டியை நேரடியாக எங்கே பார்ப்பது?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த பயிற்சி ஆட்டத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதேசமயம் ஆன்லைனில் போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள் இந்த போட்டியை ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். 

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி., ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ்.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget