T20-இல் தொடர்ந்து சொதப்பல்.. இஷான் கிஷனின் மோசமான ஸ்கோர்களை லைக் செய்த நிதிஷ் ராணா!
கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன், சமீப காலமாக டி20 வடிவத்தில் சொதப்பி வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் நிதிஷ் ராணா, இஷான் கிஷன் கடைசியாக ஆடிய 15 டி20 சர்வதேச போட்டிகளின் ரன் எண்ணிக்கையை ட்விட்டர் பக்கத்தில் லைக்ஸ் செய்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன், சமீப காலமாக டி20 வடிவத்தில் சொதப்பி வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் இஷான் கிஷன் 4 மற்றும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த எட்டு இன்னிங்ஸ்களாக 37, 2, 1, 5, 8, 17, 4 மற்றும் 19 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இஷான் கிஷன் கடைசியாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் அரைசதத்தை அடித்தார். மேலும், இஷான் கிஷன் தனது கடைசி 15 இன்னிங்ஸில் 15.30 சராசரியில் 199 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தநிலையில், முப்டால் வொக்ரா என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், இஷான் கிஷன் கடைசியாக விளையாடிய 13 டி20 போட்டிகளில் அவர் அடித்த ரன் எண்ணிக்கையை பதிவிட்டு இருந்தார். அதை நிதிஷ் ராணா லைக்ஸ் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நிதிஷ் ராணா தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்தார். அதில் தேசிய அணிக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்தார். நிதிஷ் ராணா கடந்த 2021 ம் ஆண்டு இந்திய அணியில் இலங்கை சுற்றுப்பயணத்தில் இடம் பிடித்திருந்தார்.
Here's the statistical comparison of Shubman Gill, Prithvi Shaw and Ishan Kishan in T20Is.#INDvNZ pic.twitter.com/jv0xalV9Xv
— CricTracker (@Cricketracker) January 28, 2023
“ரன்களை அடிப்பதும், எனது ஆட்டத்தை மேம்படுத்துவதும்தான் என் கையில் இருக்கிறது. இந்த சீசனில் அதிக ரன்கள் எடுப்பேன் என்று நம்புகிறேன். யாராவது என்னை 400 ரன்களுக்கு (ஐபிஎல் சீசன்களில்) எடுக்கவில்லை என்றால், 600 ரன்களை அடிப்பதே எனது வேலை” என்று கூறினார்.
மேலும், “ஒரு கிரிக்கெட் வீரராக, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை நான் எப்போதும் விரும்புகிறேன். நான் விளையாடிய நிலையில் எனக்கு வசதியாக இல்லை. ஆனால் நான் எந்த சாக்குப்போக்குகளையும் கூற விரும்பவில்லை. வரவிருக்கும் ஐபிஎல்லில் 500+ ரன்களை குவிப்பேன், இதனால் தேர்வாளர்கள் கவனத்தை ஈர்க்க முடியும், ”என்று கூறினார்.
இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், பிரித்வி ஷா, தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுசுவேந்திர யாதவ். , அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார்.
நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், டேன் கிளீவர் (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், மைக்கேல் ரிப்பன், லாக்கி பெர்குசன், இஷ் சோதி, பிளேர் டிக் ஜேக்கப் டஃபி, ஹென்றி ஷிப்லி மற்றும் பென் லிஸ்டர்.