Ashes Test: அன்று கில்.. இன்று ராபின்சன்.. ஏமாத்துறதுதான் வேலையா..? ஆஸ்திரேலியாவை விளாசும் நெட்டிசன்கள்..!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கேட்ச் பிடித்து தரையில் பட்ட பந்திற்கு அவுட் கேட்டு ஆரவாரம் செய்த ஆஸ்திரேலிய அணியை நெட்டிசன்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர்.
![Ashes Test: அன்று கில்.. இன்று ராபின்சன்.. ஏமாத்துறதுதான் வேலையா..? ஆஸ்திரேலியாவை விளாசும் நெட்டிசன்கள்..! Netizens Slam Labuschagne As He Claims Illegal Catch robinson During The Ashes Ashes Test: அன்று கில்.. இன்று ராபின்சன்.. ஏமாத்துறதுதான் வேலையா..? ஆஸ்திரேலியாவை விளாசும் நெட்டிசன்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/896fdb3d7af0c18b1d04b8c3fea86c471687238027620102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எந்தளவு வலுவான அணியாக உள்ளதோ அதே அளவிற்கு அவர்கள் மீது ஸ்லெட்ஜிங், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. பால் டேம்பரிங் விவகாரத்திற்கு பிறகே ஆஸ்திரேலிய அணியினர் மைதானத்தில் ஸ்லெட்ஜிங் எனப்படும் எதிரணியை சீண்டுவது பெருமளவில் குறைந்துள்ளது.
இப்படி செய்யலாமா..?
ஆஸ்திரேலிய அணி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. பர்மிங்காமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4ம் நாளான நேற்று இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் ஆடிக்கொண்டிருந்தபோது 55வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். அப்போது, ராபின்சன் பேட்டிங் செயது கொண்டிருந்தார். ஷார்ட் லெக் திசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேனே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஹேசல்வுட் பவுன்சர் பந்தை வீசினார். அதை ராபின்சன் பேட்டால் தடுத்தார்.
Whi this Not out . The way labuschagne was celebrating, it shows the great sportsmanship of Aussies 😂. @ShubmanGill pic.twitter.com/PgYdwIyase
— niraj kumar (@nirajku1234) June 19, 2023
நெட்டிசன்கள் விமர்சனம்:
அப்போது, பேட்டில் பட்ட பந்தை பாய்ந்து பிடித்த லபுஷேனே தரையில் தேய்த்தவாறே பந்தை எடுத்தார். ஆனால், அவர் கேட்ச் பிடித்தது போலே லபுஷேனேவும், ஆஸ்திரேலிய அணியும் கொண்டாடினர். மேலும், ஆஸ்திரேலிய அணி சார்பில் ராபின்சனுக்கு எதிராக அப்பீல் செய்தனர். மூன்றாவது நடுவர் ரீப்ளேயில் பார்த்தபோது லபுஷேன் பந்தை பிடித்தவுடன் தரையில் பந்து பட்டது மிக தெளிவாக தெரிந்தது. இதனால், மூன்றாவது அம்பயர் நாட் அவுட் அளித்தார். பின்னர், பிராடுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய ராபின்சன் 27 ரன்கள் விளாசினர்.
இந்த சம்பவத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுப்மன்கில்லுக்கு பிடித்த கேட்ச் அவுட்டுடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய அணியை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
சுப்மன்கில் சம்பவம்:
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 2வது இன்னிங்சில் சுப்மன்கில் ஆடிக்கொண்டிருந்தபோத அவர் அடித்த பந்தை கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்தபோது பந்து தரையில் பட்டது மிக தெளிவாக தெரிந்தது. ஆனாலும், ரீப்ளே வரை சென்ற அந்த அவுட்டில் மூன்றாவது அம்பயர் சுப்மன்கில்லுக்கு அவுட் வழங்கினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 393 ரன்களும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களும் எடுத்தனர், இதையடுத்து, 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகி 273 ரன்கள் எடுத்தது. தற்போது 281 ரன்கள் இலக்குடன் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகுளை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ashes Test: இறுதிக்கட்டத்தில் ஆஷஸ்.. 281 ரன்களை எட்டிப்பிடிக்குமா ஆஸ்திரேலியா..? வெற்றி பெறுமா இங்கிலாந்து..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)