மேலும் அறிய

Ashes Test: இறுதிக்கட்டத்தில் ஆஷஸ்.. 281 ரன்களை எட்டிப்பிடிக்குமா ஆஸ்திரேலியா..? வெற்றி பெறுமா இங்கிலாந்து..?

Ashes Test: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து அணி 281 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து 393 ரன்களை குவிக்க, ஆஸ்திரேலியா கவாஜா சதத்தால் 383 ரன்களை குவிக்க 2வது இன்னிங்சில் இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடங்கியது.

273 ரன்களுக்கு ஆல் அவுட்:

ஒல்லி போப்பும், ஜோ ரூட்டும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஒல்லி போப் 14 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஹாரி ப்ரூக் – ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 46 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் 46 ரன்களில் ஆட்டமிழக்க 150 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென்ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடினார்.

அவருக்கு ஜானி பார்ஸ்டோ நல்ல ஒத்துழைப்பு அளித்தார். பார்ஸ்டோ 39 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 20 ரன்களை எடுத்த நிலையில் அவுட்டாக, அடுத்து வந்த மொயின் அலி நிதானமாக ஆடினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் ஸ்டோக்ஸ் 66 பந்தில் 5 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடைசியில் ராபின்சன் 27 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 66.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.

வெற்றி பெறப்போவது யார்?

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்களை இங்கிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, இந்த மைதானத்தில் 281 ரன்கள் என்பது சற்று கடினமானதே ஆகும். இதைத்தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய உஸ்மான் கவாஜா – டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.

கடந்த இன்னிங்சில் சொதப்பிய வார்னர் 57 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லபுஷேனே களமிறங்கினார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி விளாசிய நிலையில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது பிராட் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் இந்த இன்னிங்சில் அசத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தை பிராட் அவுட்டாக்கினார்.

நெருக்கடியில் ஆஸ்திரேலியா?

நேற்றைய ஆட்ட நேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 34 ரன்களுடனும், போலந்து 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 174 ரன்கள் தேவைப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் தொடங்க இங்கிலாந்திற்கு இன்னும் 7 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. முக்கிய விக்கெட்டுகளான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனே அவுட்டாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

அந்த அணியில் ட்ராவிஸ் ஹெட், கிரீன், கேரி, கம்மின்ஸ் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடைசி நாள் பரப்பான கட்டத்தை எட்டியுள்ளதால் இரு நாட்டு ரசிகர்களும் வெற்றிபெற போவது யார் என்பதை காண ஆர்வமுடன் உள்ளனர்.

மேலும் படிக்க: WC Qualifiers: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சதமடித்த அமெரிக்க வீரர்.. உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அசத்தல்..!

மேலும் படிக்க: IND vs WI: புஜாராவுக்கு இடமில்லையா..? அவருக்கு பதிலாக இந்திய அணியில் யார்..? வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஒரு பார்வை!

தலைப்பு செய்திகள்

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget