MS Dhoni: "ஒரு முறை கூட முடியல" தோனியிடம் எடுபடாத ஜாம்பவான் நாதன் லயனின் பவுலிங்!
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் லியோன் பந்தில் இதுவரை விக்கெட்டை பறிகொடுக்காத எம்.எஸ்.தோனி.
ஆஸ்திரேலிய அணி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அந்த 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 3ம் தேதி சிட்னியில் தொடங்க உள்ளது. இதையடுத்து இரு அணி வீரர்களும் சிட்னியில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாதன் லயன் பந்தில் அவுட்டே ஆகாத தோனி:
இச்சூழலில், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் “நான் விளையாடியதில் சிறந்த எதிரணி பேட்ஸ்மேன்கள் யாரென்றால் அது விராட், சச்சின், டிவில்லியர்ஸ்” என்று கூறினார். இதனிடையே நாதன் லியோன் பந்தில் ஒரு முறை கூட டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டை பறிகொடுக்காத வீரர் எம்.எஸ்.தோனி என்ற ருசிகர தகவலை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இதுவரை எத்தனை பந்துகள் அவரிடம் இருந்து சந்தித்துள்ளார், எத்தனை ரன்களை அடித்துள்ளார் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
இதுவரை 155 பந்துகள்:
MS Dhoni against Nathan Lyon in Test Unreal Numbers 🥵🐐 pic.twitter.com/zGXnzWjQVw
— N. (@Relax_Boisss) January 1, 2024
நாதன் லியோன் பந்தில் முதன் முதலில் டெஸ்ட் தொடரில் கடந்த 2011 ஆம் ஆண்டில் எம்.எஸ்.தோனி மொத்தம் 10 பந்துகளை சந்தித்துள்ளர். இதில் 4 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டில் 12 பந்துகளை சந்தித்த தோனி 11 ரன்கள் எடுத்தார். அதேபோல், அதிகபட்சமாக கடந்த 2013 ஆம் ஆண்டில் நாதன் லயன் வீசிய 109 பந்துகளை சந்தித்த அவர் 127 ரன்களை குவித்துள்ளார். அதில், 12 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல், கடந்த 2014 ஆம் ஆண்டில் 24 பந்துகளை சந்தித்த எம்.எஸ்.தோனி 15 ரன்களை எடுத்தார். இப்படி, நாதன் லயன் பந்து வீச்சில் இதுவரை 155 பந்துகளை சந்தித்துள்ள தோனி 157 ரன்களை குவித்துள்ளார்.
முன்னதாக, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்தில் எம்.எஸ்.தோனி ஒரு முறை கூட விக்கெட்டை பறிகொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான தகவல்களைத் தான் தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: India cricket team schedule: 2024 ஆம் ஆண்டில்... இந்திய அணி விளையாடும் போட்டிகள் இது தான்... விவரம்!
மேலும் படிக்க: Tamil Thalaivas: தொடர் தோல்வி! மீண்டு வரும் முயற்சியில் தமிழ் தலைவாஸ் - அடுத்து யாருடன் மோதல்?