Mohammed shami : ”அண்ணன் வரார் வழிய விடு..” ஆடுகளத்துக்கு திரும்பும் ஷமி
Mohammed shami : காயத்தில் இருந்து மீண்டு கிரிக்கெட் களத்துக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி திரும்பவுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்ததால் விரைவில் ஆடுகளத்துக்கு திரும்ப உள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சி போட்டியில் ஷமி:
கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு கிரிக்கெட் ஆடுகளத்துக்கு திரும்பவுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. மத்திய பிரதேஷ் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பெங்கால் அணிக்காக களமிறங்கவுள்ளார் ஷமி. இது குறித்த தகவலை பெங்கால் அணி பயிற்சியாளர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா உறுதி செய்துள்ளார். இதற்கான தகுதி சான்றிதழையும் தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியுள்ளது.
முகமது ஷமியின் வருகை பெங்கால் அணி மற்றும் இந்திய கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இது குறித்து பேசிய பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் நரேஷ் ஓஜா, முகமது ஷமியின் வருகை இந்திய அணி மற்றும் பெங்கால் அணிக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
முகமது ஷமி காயம்:
கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயமடைந்தார். அந்த தொடரில் இந்திய அணிக்காக மொத்தம் 24 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 57 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தார், அது தான் இந்திய வேகப்பந்து வீச்சாளரின் ஒருவரின் சிறந்த ஒருநாள் போட்டி பந்து வீச்சாக உள்ளது. இதன் பிறகு காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின்னர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியிம் ஷமி பயிற்சிகளை மேற்கொண்டு தயாராகி வந்தார் ஷமி.
ஆஸ்திரேலியா தொடர்:
இந்தியா ஆஸ்திரேலியா பார்டர் காவஸ்கர் தொடரில் ஷமி விளையாடுவாரா என்ற கேள்வி இந்திய கேப்டன் ரோகித் சர்மா மீது எடுத்து வைக்கப்பட்டது. இதற்கு பேசிய அவர், "நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம் பெறுவாரா என்பது சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால் அவருடைய உடல் தகுதியை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காலில் முட்டி பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அவர் தற்போது மீண்டும் ஓய்வில் இருக்கிறார். இதில் அடுத்து மீண்டும் அவர் தன்னுடைய உடல் தகுதியை மீட்கும் பணியில் ஆரம்பிக்கப் போகிறார்.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி உள்ள சமியை மருத்துவர்களும் பிசியோ நிபுணர்களும் கண்காணித்து வருகின்றனர்.ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத ஷமியை ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எனினும் அவர் முழு உடல் தகுதியை பெற வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கின்றேன்"என்று ரோஹித் ஷர்மா என்று தெரிவித்திருந்தார்.
இதன் பிறகு ஷமி காயத்தில் இருந்து ஷமி குணமாகி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ டிரெண்டானது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அவரின் பெயர் இடம் பெறும் ரசிகர்கள் எதிர்ப்பார்ததனர். ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து விளையாடுவதற்கான உடற்தகுதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவரது பெயர் இடம்பெறவில்லை.
தற்போது காயத்தில் இருந்து ஷமி குணமடைந்துவிட்டதால் பெங்கால் அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாட உள்ளதால், அவர் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.