மேலும் அறிய

Mohammed Shami: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமி? - வெளியான முக்கிய தகவல்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பர்ப்போம்:

ஐஐசி உலகக் கோப்பை 2023 தொடரில் தன்னுடைய அசாத்திய திறமையால் மாற்று அணி வீரர்களை அலறவிட்டவர் முகமது ஷமி. அந்த வகையில் இந்த முறை இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 6 போட்டிகள் விளையாடிய ஷமி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு உலகக் கோப்பை 2023 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அதோடு சர்வதேச உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றவர் ஷமி.

காயத்தால் அவதிப்படும் ஷமி:

இச்சூழலில், முகமது ஷமிக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனிடையே, இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அதன்படி, 3 டி 20 போட்டிகள் , 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், தற்போது வரை 2 டி 20 போட்டிகள் முடிந்துள்ளது.

மேலும், இன்று (டிசம்பர் 14) 3 வது ஒரு டி 20 போட்டி நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதன்படி, இந்த தொடர் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது.

டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?

இச்சூழலில், இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை (டிசம்பர் 25) ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளது. கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், நவ்தீப் சைனி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தயாராக உள்ளனர். மேலும், முகமது ஷமி மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை அண்மையில் வெளியிட்ட பிசிசிஐ , ”முகமது ஷமி தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார், மேலும் அவரது உடல் தகுதியை பொறுத்து டெஸ்ட் தொடரில் விளையாடுவது அமையும்” என்று கூறியது கூறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Arjuna Award: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முகமது ஷமி? வெளியான முக்கிய தகவல்!

மேலும் படிக்க: AUS vs PAK: காசாவுக்கு ஆதரவாக ஷூவில் வாசகம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget