மேலும் அறிய

TNPL Cricket : டி.என்.பி.எல். சாம்பியன் பட்டத்தை "மதுரை பாந்தர்ஸ்" கைப்பற்றும் - கேப்டன் சதுர்வேதி நம்பிக்கை

டி.என்.பி.எல். சாம்பியன் பட்டத்தை மதுரை பாந்தர்ஸ் அணி கைப்பற்றும் என்று மதுரை கேப்டன் சதுர்வேதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதைப் போல தமிழ்நாடு அளவில் டி.என்.பி.எல். நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். போட்டி வரும் 23-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை, கோவை, மதுரை, சேலம் என தமிழ்நாட்டின் 8 முக்கிய நகரங்களின் அணிகள் மோதுகின்றனர். இவற்றில் முக்கிய அணியாக மதுரை பாந்தர்ஸ் கருதப்படுகிறது. இந்த அணியின் புதிய சீருடை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.இ.ஒ எம்.டி.மகேஷ்,மதுரை பாந்தர்ஸ் அணியின் டைடில் ஸ்பான்சரான மார்க் நிறுவனத்தின் சி.எப்.ஒ மோகன் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்கள்.

மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் சதுர்வேதி பேசியதாவது “6வது சீசன் டி.என்.பி.எல் தொடர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. 5 சீசன் தொடர்களும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. மதுரை பாந்தர்ஸ் அணி சிறப்பான வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது. இந்த முறையும் அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பயிற்சியின் போது சிறப்பாக விளையாடினார்கள். பாண்டிச்சேரியில் நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் வீரர்கள் அனைவரும் சிறந்த திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இந்த சீசனில் மதுரை பாந்தர்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 


TNPL Cricket : டி.என்.பி.எல். சாம்பியன் பட்டத்தை

டி.என்.பி.எல் தொடரை சர்வதேச அளவில் எடுத்து செல்வதற்கான முயற்சியில் அதன் நிர்வாகிகள் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறோம். கொரோனாவால் கடந்த சீசன் சென்னையில் மட்டும் நடைபெற்றது. ஆனால், இந்த சீசனில் கூடுதலாக கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய இரண்டு இடங்களில் போட்டி நடைபெறுகிறது. இது எங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. அங்கு சென்று விளையாடுவதை ரொம்பவே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து இடங்களிலும் எங்கள் அணிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். எதிர்காலத்தில் மதுரையிலும் டி.என்.பி.எல் தொடர் நடைபெறும் என்று நம்புகிறேன்.” என்றார்.

சீருடையை வெளியிட்டு பேசிய மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.இ.ஓ எம்.டி.மகேஷ், “டி.என்.பி.எல் கிரிக்கெட் இளைஞர்களிடம் கிரிக்கெட்டை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கிரிக்கெட்டில் புதிய புரட்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த வருட தொடரில் மதுரை பாந்தர்ஸ் சிறப்பாக விளையாடும். அணியின் வீரர்கள் அனைவரும் அதிக திறன் கொண்டவர்கள். குறிப்பாக ஐ.பி.எல் தொடரில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி மீண்டும் டி.என்.பி.எல் தொடரில் விளையாடுகிறார். இதனால் இந்த வருடம் டி.என்.பி.எல் தொடர் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்க்கும்.


TNPL Cricket : டி.என்.பி.எல். சாம்பியன் பட்டத்தை

முன்பெல்லாம் ரஞ்சி டிராபி விளையாடினால் தான் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும். ஆனால், இப்போதெல்லாம் மாறிவிட்டது. டி.என்.பி.எல் விளையாடினால், அதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்து விடுகிறார்கள். எனவே, இப்போது கிரிக்கெட் முழுமையாக மாறிவிட்டது. டி20 தொடர் போல் டி10 போட்டிகளும் வந்துவிட்டது. அதனால், டி.என்.பி.எல் தொடரில் விளையாட இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். வீரர்கள் தேர்வு வைத்தால் குறைந்தது 1000 வீரர்கள் வருகிறார்கள்.

வருண் சக்ரவர்த்தி, நட்ராஜ் போன்ற வீரர்கள் டி.என்.பி.எல் மூலமாக கிரிக்கெட்டில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருப்பதால், இளைஞர்களுக்கு மட்டும் இன்றி கிரிக்கெட் உலகிற்கும் டி.என்.பி.எல் புதிய வழியை திறந்திருக்கிறது” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget