Legends League Cricket 2022: உலக அணிக்கு எதிராக மீண்டும் கங்குலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி - எப்போது தெரியுமா?
75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய மகாராஜா vs உலக ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய தன்னுடைய 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு முதல் 75வது சுதந்திர தினத்திற்கான கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்திய அரசு சார்பில் ‘ஆஷாதி க அமிர்த மஹோத்சவ்’ என்ற பெயரில் இந்த விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் லெஜண்ட் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் அமைய உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் செப்டம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய மகாராஜா அணியை எதிர்த்து உலக ஜெயிண்ட்ஸ் அணி மோத உள்ளது.
Dada @SGanguly99 is set to lead the India Maharajas against @Eoin16’s World Giants for the #LegendsLeagueCricket Special Match.
— Legends League Cricket (@llct20) August 12, 2022
Check out the full squad of the teams. Are you excited?@SGanguly99 @Eoin16 @RaviShastriOfc #BossLogonKaGame #AzadiKaAmritMahotsav pic.twitter.com/Jkt75wsNSo
இந்திய மகாராஜா அணிக்கு கேப்டனாக சவுரவ் கங்குலி செயல்பட உள்ளார். கங்குலி தலைமையிலான அணியில் வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசஃப் பதான்,இர்ஃபான் பதான், பத்ரிநாத்,ஸ்டூவர் பின்னி, ஸ்ரீசாந்த்,பார்த்தீவ் பட்டேல், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா,பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜொகிந்தர் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியை எதிர்த்து மோதும் உலக ஜெயிண்ட்ஸ் அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த அணியில் லெண்டல் சிம்மன்ஸ், கிப்ஸ்,காலிஸ், ஜெயசூர்யா, நாதன் மெக்கலம்,ஜாண்டி ரோட்ஸ்,முத்தையா முரளிதரன், ஸ்டெயின், மசகட்சா, மோர்தாசா,அஷ்கர் ஆஃப்கான், பிரட் லீ, மிச்செல் ஜான்சன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தத் தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்த தொடர் ஜனவரி மாதம் 20 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் 10 நாடுகளை சேர்ந்த வீரர்கள் 4 அணிகளாக பிரிந்து விளையாட உள்ளனர். இந்தத் தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் நடைபெற உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்