Kane Williamson: ODI வரலாற்றில் புதிய சாதனை - விராட் கோலி சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
Kane Williamson: நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சனின் புதிய சாதனை பற்றி காணலாம்.

நியூசிலாந்து அணியின் ஸ்டார் கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ( Kane Williamson h) அதிரடியாக சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
கேன் வில்லியம்சன் அதிரடி சதம்:
இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன், இறுதி வரை ஆட்டமிழக்காமல் 113 பந்துகளில் 133 ரன்கள் எடுத்தார். 13 பவுண்ட்ரிஸ், 2 சிக்ஸர் விளாசினார். இது ஒருநாள் கிரிக்கெட்ட் போட்டிகளில் அவருக்கு 14-வது சதம் ஆகும். கடந்த 2023 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு அவர் களத்திற்கு திரும்பியுள்ளார். இந்த தொடரில் அதிரடி கம்பேக் கொடுத்திருந்தார். தொடரின் முதல் போட்டியில், அரை சதம் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7000 ரன்களை கடந்தார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகவேகமாக 7000 ரன் கடந்த வீரர் என்ற பெருமையும் இவரை சேர்ந்தது. கேன் வில்லியம்சன், 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில், விராட் கோலி 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, 150 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்து முதல் இடத்தில் இருக்கிறார். 4-வது இடத்த்தில், 166 இன்னிங்சில் ஏழாயிரம் கடந்து ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார்.

இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டி செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன் எடுத்தது.
தென் ஆப்பிரிக்க அணியில், அறிமுக ஆட்டக்காரரான மேத்யூ பிரெட்ஸ்கீ 11 பவுண்ட்ரிஸ், 5 சிக்ஸர்ஸ் உடன் 148 பந்துகளில் 150 ரன்களை அடித்து அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார், இளம்வீரர் மேத்யூ தென்னாப்பிரிக்க அணிக்காக அறிமுக போட்டியிலே சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையும் இவருக்கு கிடைத்துள்ளது. நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.




















