மேலும் அறிய

Kagiso Rabada: இந்திய அணியினை சிதைத்த ரபாடா; சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 7வது தென்னாப்பிரிக்கா வீரரானார் ககிசா ரபாடா. இந்த சாதனையை இவர் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் முக்கியமான வீரரான ககிசா ரபாடா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சாதனையை இவர் இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச டெஸ்ட்டில் படைத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் ககிசா ரபாடா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இதுவரை (அதாவது இந்தியா 59 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்ததுவரை) ரபடா 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷ்ர்துல் தகூர் என 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணமாக இருந்தார். 

ரபாடாவைப் பொறுத்தவரையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 61 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 56 டி20 போட்டிகள் என மொத்தம் 228 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இந்த 228 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஏழாவது தென்னாப்பிரிக்கா வீரர் ஆவார். 

ஷால் பொல்லாக் (823), டேல் ஸ்டெயின் (697), மக்காயா எண்டினி  (661), ஆலன் டொனால்ட் (602), ஜாக் காலிஸ் (572), மற்றும் மோர்னே மோர்கெல் (535) ஆகியோர் 500 விக்கெட்டுகளை சர்வதேச போட்டிகளில் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர்களாவர். இவர்களுக்கு அடுத்து இந்த வரிசையில் ரபாடா இணைந்துள்ளார்.  ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 5 விக்கெட்டுகளை 14 முறையும், 10 விக்கெட்டுகளை 4 முறையும் வீழ்த்தியுள்ளார். இதுமட்டும் இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டுமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 

ரோகித் சர்மாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ரபாடா 

இன்று அதாவது டிசம்பர் 26ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள சென்சூரியனில் அமைந்துள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில்  முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது. 

அதன்படி இந்திய அணியின் இன்னிங்ஸினை கேப்டன் ரோகித் சர்மாவும் இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் தொடங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணி சிறப்பான மற்றும் வலுவான தொடக்கத்தினை ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 5 ரன்களுக்கு இழந்தார். ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசா ரபாடா வீசிய பந்தினை ஸ்கொயெர் லெக் திசையில் தூக்கிய அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரோகித் சர்மா போட்டியின் தொடக்கத்திலேயெ தனது விக்கெட்டினை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 

அதிரடி பேட்டிங்கிற்கு சொந்தக்காரரான ரோகித் சர்மா தென்னாப்பிரிக்கா அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளரான ககிசா ரபாடாவினை எதிர்கொள்ள தொடர்ந்து தடுமாறி வருகின்றார். ககிசா ரபாடா ரோகித் சர்மாவுக்கு எதிராக  அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து, 28 போட்டிகளில் பந்து வீசி அதில் 13 முறை விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார். சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மாவின் விக்கெட்டினை அதிகமுறை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்றால் அது, ககிசா ரபாடாதான். டெஸ்ட் கிரிக்கெட்டினைப் பொறுத்தவரையில் ககிசா ரபாடாவிடம் ரோகித் சர்மா 7 போட்டிகளில் 6 முறை தனது விக்கெட்டினை இழந்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget