மேலும் அறிய

13 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி...ஆஸி., மண்ணில் முதல் சதம்...ரூட்டின் கிரிக்கெட் வாழ்கையில் மறக்கமுடியாத சாதனை

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் போட்டியில் தனது 40ஆவது சதத்தையும் பதிவு செய்தார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஜோ ரூட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 40வது சதத்தை (Joe Root 40th Century) அடித்துள்ளார். ரூட் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் சதத்தை அடித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். இதன் மூலம், ஜோ ரூட் இப்போது இங்கிலாந்தின் எட்டாவது கிரிக்கெட் வீரராகிவிட்டார். அவர் காபா மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்துள்ளார். அவருக்கு முன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் இயான் போத்தம் உட்பட 7 கிரிக்கெட் வீரர்கள் இதைச் செய்துள்ளனர்.

13 ஆண்டுகளில் முதல் முறை

ஜோ ரூட் 2012 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகம் ஆனார். ரூட் இதுவரை 7 வெவ்வேறு நாடுகளில் சென்று சதமடித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவில் இதுவரை சதம்  அடிக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட்டின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 89 ரன்கள். ஆனால் இப்போது அவர் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்ததன் மூலம், அவரின் நீண்ட நாள்  காத்திருப்பு முடிவுக்கு வந்தது

ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிக்க அதிக இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் ஜோ ரூட்டும் இணைந்துள்ளார். ரூட் 30 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சதம் அடித்தார். அவருக்கு முன் இயான் ஹீலி (41 இன்னிங்ஸ்), பாப் சிம்சன் (36 இன்னிங்ஸ்), கார்டன் கிரீனிஜ் (32 இன்னிங்ஸ்) மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோரும் ஆஸ்திரேலியாவில் தங்கள் முதல் சதத்தை அடிக்க 32 இன்னிங்ஸ் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

HISTORY BY JOE ROOT 🚨

- Joe Root has scored his first Test Hundred in Australia 🔥

- That's his 40th Test Hundreds in 291 innings 👏🏻

- It took Joe Root 12 years to score his first Test century against Australia in Australia 🦘 #Ashes2025 pic.twitter.com/u2gZb3oo6t

— Richard Kettleborough (@RichKettle07) December 4, 2025

">

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்துள்ளனர். ஜோ ரூட் 135*, ஆர்ச்சர் 32* ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஜோ ரூட் தனது வாழ்க்கையில் 40வது டெஸ்ட் சதத்தை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரூட் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் (51), ஜாக்ஸ் காலிஸ் (45) மற்றும் ரிக்கி பாண்டிங் (41) ஆகியோர் அதிக சதங்கள் பட்டியலில் அவருக்கு முன்னிலையில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Embed widget