Narendramodi: குஜராத்தில் நடைபெறும் இறுதிப் போட்டி... நேரில் கண்டுகளிக்க வரும் பிரதமர் நரேந்திர மோடி?
குஜராத்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக காண உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது உலகக் கோப்பை தொடர். இறுதிப் போட்டியும் அந்த மைதானத்தில் நடைபெற உள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக போட்டியை பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்தியா:
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதன்படி, இதுவரை இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல், நேற்று (நவம்பர் 15) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் அடித்தனர். அதன்படி, விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 105 ரன்களும் குவித்தனர்.
இந்த போட்டியில் சதம் அடித்தன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிகம் சதம் (50) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இணைந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. 39 ரன்களுக்கு பிறகு விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்திய அணிக்கு எல்லைச் சாமி போல் செயல்பட்டார் முகமது ஷமி. இந்த போட்டியில், 9.5 ஓவர்கள் வீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணி வீரர்களை மிரள வைத்தார். இவ்வாறாக இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியை நேரில் பார்க்கும் மோடி?
நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியை காண கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என நட்சத்திரங்கள் குவிந்தனர். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தன் மனைவி லாதாவுடன் சென்று ஆட்டத்தை நேரில் கண்டு களித்தார்.
இச்சூழலில், பிரதமர் மோடி பிறந்த சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியை கண்பதற்கு நேரடியாக வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமர் அலுவலகம் சார்பாக நரேந்திர மோடி நேரடியாக சென்று கிரிக்கெட் பார்ப்பார் என்பது போன்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: SA vs AUS Semi Final LIVE: ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு; விக்கெட்டுகள் வீழ்த்தி ஷாக் கொடுக்கும் தென்னாப்பிரிக்கா
மேலும் படிக்க: Ashwin Meets Rajni: உலக கோப்பை போட்டிக்கு இடையே குட்டி மீட்டிங்... சூப்பர் ஸ்டாருடன் அஸ்வின்! போட்டோ வைரல்