Watch Video: சச்சின் பந்து போட.. சூர்யா அடித்து ஆட.. கண்கொள்ளா காட்சியாக மாறிய ஆட்டம்!
ISPL 2024: ஐபிஎல் தொடரை பின்பற்றி இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டியை வெறோரு தளத்துக்கு எடுத்து சென்று வணிக நோக்கத்தை விரிவுப்படுத்திய இந்த தொடரை பின்பற்றி பல்வேறு நாடுகளிலும் பல போட்டித் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
The Star Studded Opening Ceremony of @ispl_t10 Begins this Evening from 5 PM Live on @SonyLIV & Opening Match Will be Played Between the Cricketers and Stars Teams before the 1st Match of the Tournament !!@AlwaysRamCharan @sachin_rt @RaviShastriOfc @Suriya_offl @akshaykumar pic.twitter.com/mRNDtnkbR3
— Trends RamCharan ™ (@TweetRamCharan) March 6, 2024
இதற்கான அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த போட்டியானது 10 ஓவர்களை கொண்டதாகும். டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரான ஐஎஸ்பிஎல்-ல் மொத்தம் 19 போட்டிகள் நடைபெறுகிறது. மும்பையில் நடந்த இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடக்க நாளில் ராம் சரண், அக்ஷய் குமார், சூர்யா மற்றும் போமன் இரானி ஆகியோர் 'நாட்டு நாடு' பாடலுக்கு ஆடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்தது.
Watta Moment it is😎🔥#SachinTendulkar Bowling To #Suriya At A Friendly Match🫶🏾pic.twitter.com/0yRQ7lzTOT
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 6, 2024
இந்த ஐஎஸ்பிஎல் தொடருக்கான அணிகளில் சென்னை அணியின் உரிமையை நடிகர் சூர்யா பெற்றது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அதேபோல் ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ராம் சரணும், ஸ்ரீநகர் கே வீரின் உரிமையாளராக அக்ஷய் குமாரும்,மஜி மும்பை அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கரும் உள்ளனர். இப்படியான நிலையில் இன்று ஐஎஸ்பிஎல் போட்டித் தொடர் தொடங்கியது.
அதில் அணியின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு நட்பு ரீதியிலாக கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். இதில் சச்சின் டெண்டுல்கர் பந்தை வீச, சூர்யா அடித்து ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Periyar Syllabus: பாஜக நீக்கிய பாடங்களை மீண்டும் சேர்த்த காங்கிரஸ்...கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு!