(Source: Poll of Polls)
Irani Cup 2024:"ஒரு சூறாவளி கிளம்பியதே" - ரவி சாஸ்திரியின் சாதனையை முறியடித்த சர்ஃபராஸ் கான்!
இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக இரட்டைச் சதம் அடித்த முதல் பேட்டர் ஆனார் சர்ஃபராஸ் கான். அதேபோல் ரவி சாஸ்திரியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக இரட்டைச் சதம் அடித்த முதல் பேட்டர் ஆனார் சர்ஃபராஸ் கான்.
இரானி கோப்பை 2024:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளைடாடி வருகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. இதனிடையே மறுபுறம் உள் நாட்டு தொடர்களின் ஒன்றான இரானி கோப்பை மும்பையில் நடைபெற்று வருகிறது.
சர்ஃபராஸ் கான் சாதனை:
இதில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார் சர்ஃபராஸ் கான். அபாரமாக விளையாடிய அவர் மொத்தம் 222 ரன்களை குவித்தார். இந்தத் தொடரில் வசீம் ஜாஃபர் அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 286 ரன்கள் அடித்ததே சாதனையாகும்.
அதன் பிறகு முரளி விஜய் 266 ரன்கள், பிரவீன் ஆம்ரே 246 ரன்களும், சுரேந்தர் அமர்நாத் 235 ரன்களும், ரவி சாஸ்திரி 217 ரன்களும், ஜெய்ஸ்வால் 213 ரன்களும் அடித்திருந்த நிலையில் தற்போது சர்பராஸ்கான் ஜெய்ஸ்வால் ரவி சாஸ்திரி ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக, சர்ஃபராஸ் கான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகமானார்.
Scary consistency of Sarfaraz Khan.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 2, 2024
- He's in the purple patch! 🙇♂️ pic.twitter.com/1VCfNvU5kH
மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃபராஸ் கான் மூன்று அரை சதம் அடித்திருக்கிறார். இந்த சூழலில் சர்ஃபராஸ் கான். இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பெறுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே எல் ராகுல் அவருடைய இடத்தில் விளையாடினார். இப்படிப்பட்ட சூழலில் தான் இரானி கோப்பையில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர் 286 பந்துகளில் 25 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உட்பட 222 ரன்களை குவித்தார்.மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்கள் எடுத்துள்ளது. போட்டியின் மூன்றாம் நாளன இன்று ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 22 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டு இழப்பிற்கு 84 ரன்களுடன் விளையாடி வருகிறது.