PM Modi: ”உங்க அழகின் ரகசியம் என்ன?” கேள்வி எழுப்பிய ஹர்லீன் தியோல்.. பிரதமர் சொன்ன கூலான பதில்
பிரதமர் மோடி, "நான் இதில் அதிக கவனம் செலுத்தவில்லை... நான் 25 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருக்கிறேன். இவ்வளவு ஆசீர்வாதங்களைப் பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று நகைச்சுவையுடன் கூறினார்.

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்தினார் அப்போது ரிக்கெட் வீரர் ஹர்லீன் கவுர் தியோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் நீங்கள் எப்போதும் பளபளப்பாக உள்ளீர்கள், உங்கள் சரும பராமரிப்பு என்ன கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு:
2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியை வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் கொண்டாடும் வகையில், நேற்று நவம்பர் 5 ஆம் தேதி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
இந்த உரையாடலின் போது, கிரிக்கெட் வீரர் ஹர்லீன் கவுர் தியோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் உங்கள் சரும பராமரிப்பு வழக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "நான் இதில் அதிக கவனம் செலுத்தவில்லை... நான் 25 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருக்கிறேன். இவ்வளவு ஆசீர்வாதங்களைப் பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று நகைச்சுவையுடன் கூறினார்.
#WATCH | Delhi: Cricketer and member of the Champion Indian Cricket team, Harleen Kaur Deol, asks Prime Minister Narendra Modi about his skin care routine.
— ANI (@ANI) November 6, 2025
Prime Minister Narendra Modi says, "I did not pay a lot of attention to this... I've been in government for 25 years now.… pic.twitter.com/deqCTZcCAE
'2017 இல், நாங்கள் கோப்பையைப் பெற முடியவில்லை'
"2017 ஆம் ஆண்டு உங்களை கடைசியாக சந்தித்தபோது, கோப்பையைப் பெற முடியாமல் போனது எங்களுக்கு நினைவிருக்கிறது. ஆனால் இந்த முறை, நாங்கள் உலக சாம்பியன்களாகிவிட்டோம் என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். உங்களை மீண்டும் சந்திப்பது ஒரு மரியாதை, மேலும் நாட்டைப் பெருமைப்படுத்துவதைத் தொடர நாங்கள் நம்புகிறோம்," என்று ஹர்மன்ப்ரீத் கூறினார்.
இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் பாரம்பரியத்திற்கு வீரர்களின் உறுதிப்பாடு, ஒற்றுமை மற்றும் பங்களிப்புக்காக பிரதமர் மோடி அவர்களைப் பாராட்டினார்.
"நீங்கள் அனைவரும் குறிப்பிடத்தக்க ஒன்றைச் சாதித்துள்ளீர்கள், "இந்தியாவில், கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல - அது மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். கிரிக்கெட் செழிக்கும்போது, நாடு கொண்டாடுகிறது; அது தடுமாறும்போது, முழு நாடும் அதை உணர்கிறது." என்று பிரதமர் கூறினார்
வெற்றியின் காரணம் என்ன
இந்திய அணியின் தொடக்க வீரரான ஸ்மிரிதி மந்தனா அணிக்கு வெற்றிக்கு கூட்டுமுயற்சியே காரணம் என்று பிரதமரிடம் பேசினார்
அவர் பேசியதாவது "இந்தப் போட்டியிலிருந்து எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பலன் என்னவென்றால், ஒவ்வொரு வீரரும் வெற்றிக்குப் பங்களித்ததாக பெருமையுடன் சொல்ல முடியும். ஒவ்வொரு தனிநபரின் முயற்சியும் முக்கியமானது," என்று மந்தனா கூறினார்.
"2017-ல் உங்களைச் சந்தித்தபோது, நாங்கள் கோப்பையைக் கொண்டு வர முடியவில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளைப் பற்றி நாங்கள் உங்களிடம் கேட்டோம், உங்கள் பதில் அடுத்த 6-7 ஆண்டுகளுக்கு எங்களுக்கு நிறைய உதவியது. இந்தியாவில் முதல் உலகக் கோப்பையை வென்றது எங்கள் விதியில்தான் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் எங்களுக்கு உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். இப்போதெல்லாம் எல்லாத் துறைகளிலும் பெண்களைப் பார்க்கிறோம், அது இஸ்ரோவாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும் சரி. இது எங்களுக்கு நிறைய உத்வேகம் அளிக்கிறது..." என்று அவர் கூறினார்..





















