Ruturaj Trending | கடைசி வரைக்கும் ருதுராஜ் இல்லையே... ட்விட்டரில் வறுத்து எடுத்த ரசிகர்கள் !
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கே.எல் ராகுல் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக சாஹல் மற்றும் இஷான் கிஷண் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டை ஏன் சேர்க்கவில்லை என்று ட்விட்டரில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் அவர் இத்தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை பெற்று இருந்தார். நடப்பு நியூசிலாந்து தொடரில் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த ஹர்ஷல் பட்டேல் களமிறக்கப்பட்டிருந்தார். ஆனால் அதிக ரன்கள் அடித்த ருதுராஜ் கெய்க்வாட்டை ஏன் சேர்க்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Ruturaj Gaikwad in T20s in 2021 :-
— Siva™ (@Punakutty2004) November 21, 2021
Innings : 28
Runs : 1023
Avg : 39.3
SR : 136.76
50s : 7
💯 : 1
Boundaries : 143
This is what cricket is, when players are not getting chance we fans support them!#INDvNZ #RuturajGaikwad #Ruturaj pic.twitter.com/CEEN5Zz16H
ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் சையத் முஷ்டாக் அலி தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். ஆகவே அவருக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாக தொடரை வென்ற பிறகு இன்றைய போட்டியில் அவர் நிச்சயம் களமிறக்கப்படுவார் என்று கருதப்பட்ட நிலையில் அவரை சேர்க்காது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
@Ruutu1331 deserved a chance clearly. 🏆💛#RuturajGaikwad #RohitSharma #Ruturaj pic.twitter.com/cI2XR0EyUM
— Imran Charanism (@thymah_fx) November 21, 2021
Why team india not give a single chance to @Ruutu1331 instead of @surya_14kumar ?#Ruturaj #BCCI #TeamIndia
— Adi Kangne (@Adi_kangne) November 21, 2021
மேலும் படிக்க: 'ஓப்பன் தாதா ஸ்டைல்'- பெல் அடித்து போட்டியை தொடங்கிய கங்குலி- வைரல் வீடியோ !