IND vs PAK, WT20: பிரித்து மேய்ந்த பிஸ்மா - இந்தியாவை திணற வைத்த பாகிஸ்தான்... இலக்கை எட்டுமா இந்தியா?
IND vs PAK, WT20: இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்துள்ளது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.
IND vs PAK, WT20: மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியின் லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 150 ரன்களை பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்க் தேர்வு செய்தது. இதனால் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் சார்பில் பிஸ்மா மாரூஃப் 55பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 68 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், அயிஷா அதிரடியாக விளையாடி, 25பந்துகளில் 2பவுண்டரி மற்றும் 2சிஸ்சர் உள்பட 43 ரன்கள் சேர்த்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து 47 பந்துகளில் 81 ரன்கள் விளாசியுள்ளனர்.
இந்திய அணியின் சார்பில், ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். போட்டியின் 16வது ஓவரை வீசிய ரேனுகா தக்கூர், அந்த ஓவரில் 3 வைய்டு பந்துகளை வீசினார். இதனால் மொத்தம் 9 பந்துகள் வீசினார். மேலும், அந்த ஓவரில் பாகிஸ்தான் அணி 18 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து களமிறங்கவுள்ள இந்திய அணி 150 ரன்களை எட்டிப் பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், இந்திய அணி இலக்கை எட்டிப்பிடிக்கும் நம்பிக்கையில் களமிறங்கவுள்ளது.
மந்தனா இல்லை
இந்திய அணியின் பேட்டர் ஸ்ருதி மந்தனா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.