IND vs NZ: நல்ல அடி... ரன் குவித்த நியூசி., கட்டுப்படுத்திய இந்திய பவுலர்கள்: 165 ரன்கள் இலக்கு!
கடைசி ஓவரை சிராஜ் வீசினார். அப்போது பேட்டர் அடித்த பந்தை தடுக்க முற்பட்டபோது கையில் பட்டு காயமானது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இன்று முதல் டி20 போட்டி ஜெய்பூரில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார்.
இதனால், நியூசிலாந்து அணிக்காக மார்டின் குப்தில், டேரில் மிட்சல் களமிறங்கினர். முதல் இன்னிங்ஸில், இந்தியாவுக்காக புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். இவர் வீசிய மூன்றாவது பந்திலேயே விக்கெட் சரிந்தது. டி20 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடிய டேரில் மிட்சல், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் க்ளீக் பவுல்டாகி டக்-அவுட்டானார்.
ஆனால், அதிரடியாக தொடங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி 100 ரன்களை கடக்கும் வரை விக்கெட்டுகள் விழவில்லை. ஒன் டவுன் களமிறங்கி இருந்த சாப்மேன், அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவருடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓப்பனர் குப்திலும் அரை சதம் கடந்து அசத்தினார்.
ஒரே ஓவரில் அஷ்வினுக்கு 2:
Ashwin gets the set Chapman and the dangerous Phillips in his final over, finishes with 2-23 #NZvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 17, 2021
தனது கடைசி ஓவரை வீச வந்த அஷ்வினுக்கு, ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தது. போட்டியின் 14வது ஓவரில்தான் இந்திய அணி இரண்டாவது, மூன்றாவது விக்கெட்டுகளை வீழ்த்தியது. சாப்மேன், ஃபிலிப்ஸ் ஆகியோர் அஷ்வினின் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினர்.
அதனை அடுத்து, ரன் ரேட் குறையும் என்ற எதிர்ப்பார்த்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் முடிந்த வரை ரன் சேர்த்துள்ளது நியூசிலாந்து அணி. தீபக் சஹார் பந்துவீச்சில் குப்தில் விக்கெட்டும், புவனேஷ்வர் பந்துவீச்சில் டிம் சைஃபெர்ட்டும் ஆட்டம் இழந்தனர். கடைசி ஓவரை சிராஜ் வீசினார். அப்போது பேட்டர் அடித்த பந்தை தடுக்க முற்பட்டபோது கையில் பட்டு காயமானது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், அதே ஓவரில் மீண்டு வந்த சிராக், இந்திய அணிக்கு 6வது விக்கெட்டை பெற்று தந்தார். ரஷின் ரவீந்திரா அவுட்டாகி வெளியேறினார். இதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 164 ரன்கள் எடுத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்