ICC Announcement: இந்தியாவில் 2 உலகக்கோப்பை தொடர்கள்: 2024 - 2031 ஐசிசி தொடர் அட்டவணை முழு விவரம் வெளியீடு!
இதில், 2026 டி20 உலகக்கோப்பையும், 2029 சாம்பியன்ஸ் டிராபியும், 2031 உலகக்கோப்பையும் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2021 டி20 உலகக்கோப்பை முடிந்துள்ள நிலையில், 2024 முதல் 2031 வரையிலான 8 ஐசிசி கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், 2026 டி20 உலகக்கோப்பையும், 2029 சாம்பியன்ஸ் டிராபியும், 2031 உலகக்கோப்பையும் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2014 முதல் 2031 வரையிலான காலக்கட்டத்தில், 8 ஐசிசி தொடர்கள், 14 வெவ்வேறு நாடுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, தென்னாப்ரிக்கா, ஜிம்பாவே, நமீபியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து. அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம் ஆகிய 14 நாடுகளில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடக்க இருக்கும் 2026 டி20 உலகக்கோப்பை இலங்கையுடனும், 2031 - 50 ஓவர் உலகக்கோப்பையை வங்கதேசத்துடனும் தொகுத்து வழங்க இருக்கிறது.
அட்டவணை முழு விவரம்:
2024 டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்
2025 சாம்பியன்ஸ் டிராபி - பாகிஸ்தான்
2026 டி20 உலகக்கோப்பை - இந்தியா, இலங்கை
2027 - 50 ஓவர் உலகக்கோப்பை - தென்னாப்ரிக்கா, ஜிம்பாவே, நமீபியா
2028 டி20 உலகக்கோப்பை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
2029 சாம்புயன்ஸ் டிராபி - இந்தியா
2030 டி20 உலகக்கோப்பை - இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து
2031 - 50 ஓவர் உலகக்கோப்பை - இந்தியா, வங்கதேசம்
Are you ready for the best-ever decade of men’s white-ball cricket?
— ICC (@ICC) November 16, 2021
Eight new tournaments announced 🔥
12 different host nations confirmed 🌏
Champions Trophy officially returns 🙌 pic.twitter.com/W1UjFkTCeG
1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடத்தப்பட்டது. அதற்கு பிறகு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் முக்கியமான ஒரு ஐசிசி தொடர் நடைபெற இருக்கிறது. அமெரிக்கா, நமீபியா நாடுகளைப் பொருத்தவரை, முதல் முறையாக ஐசிசி கிரிக்கெட் தொடர் அந்தந்த நாடுகளில் நடைபெற உள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்