மேலும் அறிய

Sarfaraz Khan: சர்ஃபராஸ் கான் ரன் அவுட்.. கடுமையாக சாடிய ரசிகர்கள்! வருத்தம் தெரிவித்த ஜடேஜா!

சர்ஃபராஸ் கான் ரன் அவுட்டுக்காக வருத்தம் தெரிவித்தார் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா.

சர்ஃபராஸ் கான் ரன் அவுட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. அந்த வகையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் நிற்கின்றனர்.

முன்னதாக, இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய  சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடினார். அதன்படி, 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்தார். அப்போது ஜடேஜாவின் செயலால் ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ். அதாவது என்னவென்றால்  ஜடேஜா 99 ரன்கள் எடுத்த போது 1 ரன்னை எடுத்து சதத்தை பதிவு செய்வதற்கு திணறிக்கொண்டிருந்தார். அப்போது வீசப்பட்ட பந்தை அடித்த ஜடேஜா 100 வது ரன்னை எடுக்க பாதி தூரம் வரையில் ஓடி வந்து விட்டார்.

ஜடேஜா ஓடிவருவதை பார்த்த சர்ஃபராஸ் கானும் பந்து எங்கே செல்கிறது என்பதை கவனிக்காமல் பாதி தூரம் ஓடிவிட்டார். அப்போது பந்து பில்டரின் கையில் சென்றதை உணர்ந்த ஜடேஜா அப்படியே நின்றுவிட்டார்ஜடேஜாவின் இந்த செயலால் பாதியிலே சிக்கிக் கொண்டு மீண்டும் கிரீசுக்கு செல்வதற்கு முன்பு ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ் கான்.  இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செயலை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா தலையில் கை வைத்துக்கொண்டு தன்னுடைய தொப்பியை கடும் கோவத்துடன் தூக்கி எறிந்தார். அதோடு ஏதோ சொல்லி ஜடேஜாவை திட்டினார் ரோகித் சர்மா. சர்ஃபராஸ் கானுக்கு அறிவுரையும் வழங்கினார்.

வருத்தம் தெரிவித்த ஜடேஜா:

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை ரசிகர்கள் பலரும் கடுமையாக சாடினார்கள். தன்னுடைய சுயநலத்திற்காக சர்ஃபராஸ் கானை ரன் அவுட் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்கள். இச்சூழலில் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ஜடேஜா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தனது தவறான அழைப்பால் சர்ஃபராஸ் கான் ரன் அவுட் ஆனதாக வருத்தம் தெரிவித்துள்ள அவர் சிறப்பாக விளையாடியதாகவும் பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க: Watch Video: அறிமுக போட்டி...அரைசதம் விளாசிய சர்ஃப்ராஸ் கான்...ப்ளைன் கிஸ் கொடுத்த மனைவி!வைரல் வீடியோ!

மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: ரோஹித் - ஜடேஜா சதம்.. சர்ஃப்ராஸ் கான் அரைசதம்! 326 ரன்களை குவித்த இந்தியா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
10th Revaluation Result 2024: வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
TN Rain Alert: அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Embed widget