மேலும் அறிய

India vs England 2nd Test: 2 வது டெஸ்ட்...இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு வைத்த இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் 399 ரன்களை இலக்காக வைத்துள்ளது இந்திய அணி.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறதுடாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதுஅதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253  ரன்கள் சேர்த்ததுஇந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை (பிப்ரவரி 4) தொடங்கியதுஇதில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்அதனைத்தொடர்ந்து மறுபுறம் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்

சதம் விளாசிய கில்:

இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 52 பந்துகள் களத்தில் நின்று 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராஜத் படிதர் 9 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார் சுப்மன் கில். அப்போது சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அதிரடியாக விளையாடி வந்த இந்திய அணி வீரர் சுப்மன் கில் 132 பந்துகளில் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்திருக்கும் 3 வது சதம் ஆகும். அதன்படி, மொத்தம் 147 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 104 ரன்கள் எடுத்தார்.

அதனைத்தொடர்ந்து களம் இறங்கிய அஸ்வின் 61 பந்துகள் களத்தில் நின்று 29 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். இவ்வாறாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.  அதன்படி இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. பந்து வீச்சை பொறுத்த வரை இங்கிலாந்து அணி வீரர் டாம் ஹார்ட்லி அதிகபட்சமாக  4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் மற்றொரு வீரரான ரேகன் அகமது 24.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
Embed widget