Indian Cricket Team: ஒரே ஆண்டில் இத்தனை முறையா...? இந்திய கிரிக்கெட் அணியின் புதிய உலக சாதனை..!
Team India break world record: ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஆட்டங்களில் விளையாடிய கிரிக்கெட் அணி என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஆட்டங்களில் விளையாடிய கிரிக்கெட் அணி என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
புதிய சாதனை:
இந்த ஆண்டில் இதுவரை 62 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியுள்ளது.
2009 இல் ஆஸ்திரேலிய அணி 61 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 39 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியுள்ளது. இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டம் தான் இந்திய அணிக்கு நடப்பாண்டில் 39வது ஆட்டம் ஆகும்.
முன்னதாக, கடந்த மாதம் ஒரு சாதனையை இந்திய கிரிக்கெட் அணி நிகழ்த்தியது. இந்த ஆண்டில் இதுவரை அதிக ஆட்டங்களில் விளையாடியது மட்டுமல்ல, அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்ற அணியும் இந்திய கிரிக்கெட் அணியாகவே இருக்கிறது. கடந்த மாதம் 25ஆம் தேதி நிலவரப்படி, இந்திய அணி 39 ஆட்டங்களில் இந்த ஆண்டு மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
அதில் டி20 ஐ பொறுத்தவரை 24 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன்மூலம், ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வசம் கடந்த 2003-ஆம் ஆண்டு இருந்த சாதனையை இந்தியா சமன் செய்தது.
சாதனைகள்:
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சமீபத்தில் தான் விளையாடி முடித்தது. அரையிறுதியுடன் வெளியேறி விட்டது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகமாக முடிந்தது.
எனினும், இந்திய கிரிக்கெட் வீரர்களும், இந்திய அணியும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறது.
Suryakumar Yadav T20 Record: மிரட்டல் சதம்..! சூர்யகுமாரின் புதிய சாதனைகள் என்னென்ன தெரியுமா..?
முதல் டி20 ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், இன்று 2ஆவது டி20 ஆட்டம் நடந்து முடிந்தது. ஹார்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம், சூர்யகுமார் யாதவ் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்.
அதிரடியாக ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சதம் விளாசினார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
A convincing victory for #TeamIndia as they beat New Zealand by 65 runs with 7 deliveries to spare.
— BCCI (@BCCI) November 20, 2022
India lead the series 1-0.
Scorecard - https://t.co/mIKkpD4WmZ #NZvIND pic.twitter.com/BQXGGGgbx5
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசியுள்ளார். அவர் மொத்தம் 11 ஃபோர், 7 சிக்ஸர் என அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இந்த சதம் சர்வதேச டி20 போட்டியில் சூர்யகுமார் யாதாவின் இரண்டாவது சதமாகும்.