மேலும் அறிய
Advertisement
INDIA Records WC: ஜோலி முடிஞ்சு..! இந்தியா படைத்த சாதனைகளின் பட்டியல் - ஷமி, ரோகித், விராட்டின் சம்பவம்
INDIA Records WC: உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு, கோலி மற்றும் ரோகித் உள்ளிட்ட வீரர்கள் பல்வேறு புதிய சாதனைகளையும் படைத்துள்ளனர்.
INDIA Records WC: இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஆட்டத்தில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை எட்டியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா:
உலகக் கோப்பையில் தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதோடு, கோலி மற்றும் ரோகித்தின் பொறுப்பான ஆட்டத்தால், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி முதற்கொண்டு தனிநபர் வரையிலும், நேற்றைய போட்டியில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
சாதனை விவரங்கள்:
- வெற்றியின் மூலம், 2003ம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்தை வீழ்த்தியது இல்லை என்ற மோசமான பயணத்தை இந்தியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது
- ஒரு உலகக் கோப்பையில் 250+ ரன்கள் என்ற இலக்கை 3 முறை வெற்றிகரமாக சேஸ் செய்த ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது
- உலகக் கோப்பையில் அதிகமுறை 4 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை ஷமி நீடித்துள்ளார் - 5 முறை
- உலகக் கோப்பையில் இரண்டு முறை 5விக்கெட்ஸ் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை தனதாக்கினார் ஷமி
- உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் (32) சாதனையை தனதாக்கினார் ஷமி
- உலகக் கோப்பையில் அதிக கேட்ச் பிடித்த 3வது வீரர் என்ற சாதனையை கோலி (19) படைத்துள்ளார்
- ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 150 கேட்ச்களை பூர்த்தி செய்த நான்காவது வீரர் அந்தஸ்தை பெற்றார் கோலி
- நேற்றைய போட்டியில் 14 ரன்களை சேர்த்த போது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை சேர்த்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார் கில். முன்னதாக தென்னாப்ரிக்கா வீரர் ஆம்லா 40 போட்டிகளில் 2000 ரன்களை சேர்த்து இருந்த நிலையில், கில் வெறும் 38 போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்
- ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் 50 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
- முதல் 10 ஓவர்களில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரோகித் சர்மா 100 சிக்சர்களை பூர்த்தி செய்துள்ளார்
- 88 ரன்களை சேர்த்தபோது இலங்கை வீரர் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் கோலி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்
- உலகக் கோப்பையில் அதிக முறை 50+ ரன்களை சேர்த்த வீரர்களின் பட்டியலில் கோலி (12) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்
- தனது கிரிக்கெட் வரலாற்றில் கோலி நேற்றைய போட்டியில் தான் முதன்முறையாக சரியாக 95 ரன்களை சேர்த்துள்ளார்.
- கோலி பேட்டிங் செய்யும் போது ஒரு கட்டத்தில் 4.3 கோடி பேர் போட்டியின் நேரலையை ஹாட் ஸ்டாரில் கண்டுகளித்தனர். இது ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion