மேலும் அறிய

IND vs WI Time Table: வெளியானது அட்டவணை.. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதும் இந்தியா..! எங்கு? எப்போது? - முழு விவரம்

IND vs WI Time Table: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் எங்கெங்கு, எப்போது நடத்தப்படும் என்று  அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் எங்கெங்கு? எப்போது நடத்தப்படும்? என்று  பிசிசிஐ அட்டவணை வெளியிட்டுள்ளது. 

இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள்

பிசிசிஐ அட்டவணை அடிப்படையில் பார்படாஸ், டிரினிடாட்டில் மூன்று ஒரு நாள் போட்டிகள் (ODIகள்) மற்றும் டிரினிடாட், கயானா, ஃபுளோரிடாவில் ஐந்து டி20 போட்டிகள் (T20Is) இதற்கு முன்னதாக டொமினிகா, ஓவல் டிரினிடாட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கின்றன். இதில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ளது குறிபபிடத்தக்கது.

இந்தத் தொடர் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிவடையும் என்று அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி ஜூலை 5-6 தேதிகளில் மேற்கு இந்திய தீவுகளுக்குப் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடித்து மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.

IND vs WI Time Table: வெளியானது அட்டவணை.. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதும் இந்தியா..! எங்கு? எப்போது? - முழு விவரம்

2 டெஸ்ட் 

ஜூலை 12ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி டொமினிகா மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 20ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

ஜூலை 12-16: டொமினிகாவில் முதல் டெஸ்ட்

ஜூலை 20-24: டிரினிடாட்டில் 2வது டெஸ்ட்

3 ஒருநாள் தொடர் 

முதல் இரண்டு  ஒருநாள் போட்டிகள் ஜூலை 27 மற்றும் 29 தேதிகளில் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி ப்ரைன் லாரா கிரிக்கெட் அகாடமியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

ஜூலை 27: பார்படாஸில் முதல் ஒருநாள் போட்டி

ஜூலை 29: பார்படாஸில் 2வது ஒருநாள் போட்டி

ஆகஸ்ட் 1: டிரினிடாட்டில் 3வது ஒருநாள் போட்டி

5 டி20 போட்டி

முதலாவது டி20 போட்டி ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ப்ரைன் லாரா கிரிக்கெட் அகாடமியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டி 6 மற்றும் 8 தேதிகளில் குயானா மைதானத்திலும், இறுதி இரண்டு டி20 போட்டிகள்  அமெரிக்காவின் ஃப்ளோரிடா மைதனானத்தில் 12 மற்றும் 13 தேதிகளில் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. 

ஆகஸ்ட் 4: டிரினிடாட்டில் முதல் டி20 ஐ

ஆகஸ்ட் 6: கயானாவில் 2வது டி20

ஆகஸ்ட் 8: கயானாவில் 3வது டி20

ஆகஸ்ட் 12: ஃப்ளோரிடாவில் 4வது டி20ஐ

ஆகஸ்ட் 13: ஃப்ளோரிடாவில் 5வது டி20ஐ

IND vs WI Time Table: வெளியானது அட்டவணை.. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதும் இந்தியா..! எங்கு? எப்போது? - முழு விவரம்

ஒளிபரப்பு உரிமை

இதற்கான ஒளிபரப்பு உரிமையைப் பொறுத்தவரை, Viacom18 இந்த தொடருக்கான டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது, இதன்மூலம் ஜியோ சினிமாவில் போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2023ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பிய ஜியோ சினிமா இதனையும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் ஸ்போர்ட்ஸ், ஃபேன்கோட் ஆகியவை, வெஸ்ட் இண்டீஸ்-இன் இருதரப்பு போட்டிகளுக்கான உரிமைகளை வைத்திருப்பவர்கள் என்பதால் அவர்கள், Viacom18 க்கு டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு துணை உரிமம் வழங்கியுள்ளனர். கூடுதலாக, ட்ரீம் ஸ்போர்ட்ஸ் தற்போது தேசிய ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியுடன் தொலைக்காட்சி உரிமைக்காக பேரம் பேசி வருகிறது. டிடி ஸ்போர்ட்ஸ் இதனை ஒளிபரப்பும் என்று தெரிகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Embed widget