IND vs WI 3rd T20 LIVE: 3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி...! ஒயிட்வாஷ் ஆகியது வெஸ்ட் இண்டீஸ்..!
IND vs WI 3rd T20 LIVE Updates: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டியின் லைவ் அப்டேட்களை கீழே உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE
Background
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரையும் இழந்துள்ளது. இந்த நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டதால் இந்திய அணி இந்த போட்டியில் எந்தவித பதற்றமுமின்றி ஆடும். அதேசமயத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்பதால் ஆக்ரோஷமாக ஆடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் இதுவரை பார்ம் இல்லாமல் தவித்து வந்த விராட்கோலி, ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பினர். வெங்கடேஷ் அய்யரும் கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டினார்.
இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டதால், கடந்த இரு போட்டிகளிலும் களமிறங்காத ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் ஆடும்வெனில் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா. ஹர்துல் தாக்கூர், ஆவேஷ்கான் ஆகியோரும் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் ஆகி இழந்துள்ளதால், டி20 தொடரில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் முனைப்புடன் ஆடும். அந்த அணியில் தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ் சிறப்பான தொடக்கம் அளித்தால் அந்த அணி இமாலய ரன்களை குவிக்கும். கடந்த போட்டியில் மிரட்டிய நிகோலஸ் பூரண் – ரோவ்மென் பாவெல் கூட்டணி இந்த போட்டியிலும் மிரட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்த போட்டி மாலை 7 மணியளவில் தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம்.
3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி...! ஒயிட்வாஷ் ஆகியது வெஸ்ட் இண்டீஸ்..!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.
நிகோலஸ் பூரண்ட அவுட்...! நிம்மதி மூச்சுவிடும் இந்தியா...!
இந்திய அணிக்கு அச்சுறுத்தல் வீரராக ஆடி வந்த நிகோலஸ் பூரண் 47 பந்தில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், இந்திய வீரர்கள் நிம்மதி மூச்சுவிட்டனர்.
தனி ஆளாகா போராடும் நிகோலஸ் பூரண் அரைசதம்..!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்து வந்தாலும், மறுமுனையில் நிகோலஸ் பூரண் மட்டும் தனி ஆளாக போராடி அரைசதம் அடித்துள்ளார்.
30 பந்துகளில் 60 ரன்கள் தேவை...! வெற்றி பெறுமா வெஸ்ட் இண்டீஸ்...!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்காக நிகோலஸ் பூரணும், ஷெப்பர்டும் போராடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 30 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்படுகிறது.
5வது விக்கெட்டாக வெளியேறினார் ஜேசன் ஹோல்டர்..!
வெஸ்ட் இணடீஸ் அணி வெற்றி பெற 60 பந்துகளில் 98 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட்டுகள்உள்ளது. இந்த நிலையில், 5வது விக்கெட்டாக ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியுள்ளார்,