IND vs WI, ODI LIVE: இந்தியாவின் பேட்டிங்கைத் தொடங்கிய தவான் - சுப்மன்கில்..!
IND vs WI, ODI Live: வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா மோதும் 2வது ஒருநாள் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இந்திய அணி அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரில் ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.
டிரினிடாட் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டிரினிடாட் நகரின் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். கடந்த போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர்தவான், தொடக்க வீரர் சுப்மன்கில் அபாரமான தொடக்கத்தை அளித்தனர். துணைகேப்டனாக பொறுப்பு ஏற்றுள்ள ஸ்ரேயஸ் அய்யரும் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர்கள் இன்றைய போட்டியிலும் பேட்டிங்கில் அசத்தினால் இந்தியாவுக்கு பலமாகும். கடந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் வரிசை ஆட்டக்காரர்கள்தான் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கும் இந்தியாவிற்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் என்பதை கடந்த போட்டியிலே நிரூபித்தனர். அந்த அணியின் ஷாய் ஹோப் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் அசத்திய கைல் மேயர்ஸ், ப்ரூக்ஸ் இன்றைய போட்டியிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஆகும். ப்ரண்டன் கிங், கேப்டன் பூரண் அதிரடி காட்டினால் அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும்.
கடந்த போட்டியில் அந்த அணியின் 8வது வரிசை வீரரான ஷெப்பர்ட் வரை பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாகும். கடந்த போட்டியில் சொதப்பிய ஹோப் மற்றும் பாவெல் இந்த போட்டியில் பேட்டிங்கில் கலக்கின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பலமாகும். இரு அணிகளைப் பொறுத்தவரையிலும் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது.
கடந்த போட்டியில் இந்தியாவின் முகமது சிராஜ், பிரசித்கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல் என அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப், சீல்ஸ், ஷெப்பர்ட்ஸ, மோட்டி, ஹொசைன் ஆகியோரும் ரன்களை வாரி வழங்கினர். இதனால், இன்றைய போட்டியில் இரு அணிகளும் பந்துவீச்சில் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், தொடரை விட்டுக்கொடுக்கமால் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
இந்தியாவின் பேட்டிங்கைத் தொடங்கிய தவான் - சுப்மன்கில்..!
வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்துள்ள 312 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் பேட்டிங்கை தவானும், சுப்மன்கில்லும் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவிற்கு 312 ரன்கள் இலக்கை நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்..!
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்துள்ளது.
115 ரன்களில் அவுட்டாகிய ஷாய் ஹோப்..!
100வது போட்டியில் சதமடித்த ஷாய் ஹோப் 115 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் 49வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் பந்தில் அவுட்டானார்.
100வது போட்டியில் 100 அடித்த ஷாய் ஹோப்..!
100வது ஒருநாள் போட்டியில் ஆடி வரும் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதம் அடித்து அசத்தியுள்ளார். சர்வதேச அளவில் 100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த 10வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதிரடி காட்டிய பூரண் போல்ட்..!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிரடியாக ஆடி வந்த கேப்டன் நிகோலஸ் பூரண் 77 பந்தில் 1 பவுண்டரி 6 சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்கூர் பந்தில் போல்டானார்.