MS Dhoni: தோனி என்ற கிரிக்கெட்டின் ஞானி.. 50 அடியில் மிகப்பெரிய கட் அவுட்.. மிரட்டிய கேரள ரசிகர்கள்..!
CSK ரசிகர் பட்டாளம் என்ற பெயரில் ஒரு ட்விட்டர் ஹேண்டில், "கேரளாவில் எம்எஸ் தோனி நிமிர்ந்து நிற்கிறார்" என்ற தலைப்புடன் கட்-அவுட்டின் படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
![MS Dhoni: தோனி என்ற கிரிக்கெட்டின் ஞானி.. 50 அடியில் மிகப்பெரிய கட் அவுட்.. மிரட்டிய கேரள ரசிகர்கள்..! IND vs SL, 3rd ODI: Fans Put Up Massive MS Dhoni Cut-Out Outside Greenfield Stadium In Thiruvananthapuram MS Dhoni: தோனி என்ற கிரிக்கெட்டின் ஞானி.. 50 அடியில் மிகப்பெரிய கட் அவுட்.. மிரட்டிய கேரள ரசிகர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/91d0dcf5a9e37cc3c45ed40bac702ca41673860840443571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
போட்டிக்கு முன்னதாக, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சில தீவிர ரசிகர்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தின் கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்திற்கு வெளியே இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் எம்.எஸ். தோனிக்கு 50 அடி பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். இதுகுறித்து, CSK ரசிகர் பட்டாளம் என்ற பெயரில் ஒரு ட்விட்டர் ஹேண்டில், "கேரளாவில் எம்எஸ் தோனி நிமிர்ந்து நிற்கிறார்" என்ற தலைப்புடன் கட்-அவுட்டின் படங்களைப் பகிர்ந்துள்ளனர். அதில், ஒரு கிரிக்கெட் வீரருக்காக இதுவரை இல்லாத உயரமான கட் அவுட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
. @MSDhoni standing tall in Kerala 💛🦁#WhistlePodu | @DhoniFansKerala pic.twitter.com/vJeHfH8H3g
— CSK Fans Army™ (@CSKFansArmy) January 14, 2023
கத்தாரில் 2022 ஃபிபா உலகக் கோப்பைக்கு முன்னதாக, இதே கேரளாவில் ஒரு கட் அவுட் போர் நடந்தது. அதில், யார் மிகச்சிறந்த கால்பந்து வீரர் என்பதை நிரூபிக்க, முதலில் லியோனல் மெஸ்ஸியின் ரசிகர்கள் மெஸ்ஸிக்கு மிகப்பெரிய கட் அவுட்டை புள்ளவூர் ஆற்றங்கரையில் கட் அவுட்டை வைத்தனர். அதனை தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் நெய்மர் ஜூனியர் ஆகியோரின் ராட்சத கட் அவுட்களை அவரவர் ரசிகர்கள் வைத்தனர்.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கீரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் பெறாத ஒருநாள் போட்டியாக இது அமைந்துள்ளது.
#FIFAWorldCup fever has hit Kerala 🇮🇳
— FIFA (@FIFAcom) November 8, 2022
Giant cutouts of Neymar, Cristiano Ronaldo and Lionel Messi popped up on a local river ahead of the tournament.
12 days to go until #Qatar2022 🏆 pic.twitter.com/29yEKQvln5
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்களை சேர்த்தது. 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 42 ரன்கள் சேர்த்து இருந்தபோது, கருணரத்னே பந்துவீச்சில் அவுட்டானார்.
சுப்மன் கில் சதம்:
மறுமுனையில் நிதானமாக ஆடிய சுப்மன் கில், இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதையடுத்து, 89 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உடன் சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். தொடர்ந்து 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட, 116 ரன்களை சேர்த்து இருந்தபோது ரஜிதா பந்துவீச்சில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார்.
கோலி அதிரடி:
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி 48 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சேர்த்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். சுப்மன்கில் ஆட்டமிழந்ததும் கோலி தனது ஆட்டத்தை வேகப்படுத்தினார். இதன் மூலம், 85 பந்துகளிலேயே கோலி தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 46வது மற்றும் சர்வதேச போட்டிகளில் அடிக்கும் 74வது சதமாகும். இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, அதிரடியாக ஆடிய விரார் கோலி 150 ரன்களை அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் உட்பட 166 ரன்களை எடுத்தார். பல்வேறு புதிய சாதனைகளையும் படைத்தார்.
இமாலய இலக்கு:
ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன் காரணமாக, இந்திய அணி 400 ரன்களை கடக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை சேர்த்தது.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினர். வெறும் 39 ரன்களை சேர்பதற்குள்ளேயே, அந்த அணியின் பாதி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை சொற்ப ரன்களை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக, தொடக்க வீரர் நுவனிது 19 ரன்களையும், ரஜிதா 13 ரன்களையும், கேப்டன் சனகா 11 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனிவரும் ஒற்றை இலக்கங்களில் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர். தொடர்ந்து வந்த வீரர்களும் அதே வேகத்தில் நடையை கட்ட இலங்கை அணி 22 ஓவர்கள் முடிவில் 73 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக, முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதோடு, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது. முன்னதாக, அயர்லாந்து அணியை நியூசிலாந்து அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)