IND vs SL 1st ODI: இலங்கைக்கு எதிராக களமிறங்கும் இந்தியா.. ரோகித் போட்ட புதிய பிளான் ஆடும் லெவன் எப்படி? ஒரு பார்வை!
டி20 தொடர் ஓய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் கொண்ட போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு கவுகாத்தியில் தொடங்குகிறது. டி20 தொடர் ஓய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுக்கிறது.
இறுதிநேரத்தில் உடல்தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சௌகரியமான காரணத்தினால் விலகினார்.
ஒருநாள் உலகக் கோப்பை இந்த ஆண்டு நடைபெற உள்ளதால், இந்திய அணிக்கு இலங்கை தொடர் மிகவும் முக்கியமானது. இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக உள்ளார்.கைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக உள்ளார்.
தொடக்க வீரராக யாருக்கு வாய்ப்பு?
போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பந்து வீசிய போது, காலில் அசவுகரியத்தை உணர்ந்ததன் காரணமாக, இலங்கை உடனான தொடரில் இருந்து பும்ரா விலகியதாக விளக்கமளித்தார். நாளைய போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனவும், இஷான் கிஷானுடன் விளையாட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறினார்.
நேற்று இலங்கை கேப்டன் ஷனக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”கடந்த சில ஆண்டுகளில் இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவை தவிர, வேறு எந்த அணியும் தொடரை வென்றதில்லை. நாங்கள் கூட டி20 தொடரை வெல்ல கடுமையாக முயற்சித்தோம். எனவே ஒருநாள் [ஓட்டியில் சவாலான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் இந்த தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. போட்டியை சிறப்பாக தொடங்க காத்திருக்கிறோம். இங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப நன்றாக தயாராகி உள்ளோம். இது அதிக ரன்கள் எடுக்கப்படும் போட்டியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கை 1வது ஒருநாள் போட்டியை எந்த டிவி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பும்?
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் கொண்டுள்ளது.
இந்தியா vs இலங்கை 1வது ODIயை நான் எப்படி நேரடி ஒளிபரப்பு செய்யலாம்?
இந்தியா மற்றும் இலங்கை முதல் ஒருநாள் போட்டியின் நேரடி ஒளிபரப்பை இந்தியாவில் உள்ள ஹாட்ஸ்டார் செயலியில் காணலாம்.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷுப்மன் கில், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ். முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
இலங்கை: தசுன் ஷனக (கேப்டன்), நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, அஷேன் பண்டார, பதும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, சாமிக்க கருணாரத்னே, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம (விக்கெட் கீப்பர்), டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷங்க, பிரமோத். வெல்லலகே, ஜெஃப்ரி வான்டர்சே, கசுன் ராஜித, லஹிரு குமார, மற்றும் மஹீஷ் தீக்ஷன.