IND vs SA 3rd ODI LIVE: வெற்றி பெறப்போவது யார்? விறுவிறுப்பான கட்டத்தில் ஆட்டம்..! தீபக் சாஹர் வெற்றி பெற வைப்பாரா?
IND vs SA 3rd ODI LIVE Updates: தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்

Background
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வி அடையும். ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
65 ரன்கள் எடுத்த நிலையில் விராட்கோலி அவுட் : காப்பாற்றுமா சூர்யகுமார் யாதவ் - ஸ்ரேயாஸ் ஜோடி
தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த 288 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய விராட்கோலி 65 ரன்கள் எடுத்த நிலையில், மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சற்றுமுன்வரை 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவும், ஸ்ரேயாஸ் அய்யர் ஆடி வருகின்றனர்.
விராட்கோலி - ஷிகர்தவான் நிதான ஆட்டம்
இந்திய கேப்டன் கே.எல். ராகுல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ள நிலையில், 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்துள்ள ஷிகர் தவானும், விராட்கோலியும் பொறுமையாக ஆடி வருகின்றனர். இவர்களது ஆட்டத்தால் இந்திய அணி 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.




















