IND vs SA 2nd Test: வாண்டரர்ஸ் டெஸ்ட்: மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் தாமதம் !
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்களுடன் ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 266 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் தேவைப்பட்டுகிறது.
Start of play on Day 4⃣ has been delayed due to rain here at the Wanderers 🌧️🌧️#TeamIndia | #SAvIND pic.twitter.com/ea2GMhNfnp
— BCCI (@BCCI) January 6, 2022
இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று மழை காரணமாக தாமதமாகியுள்ளது. வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று காலை முதல் லேசாம மழை பெய்து வந்தது. இதனால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. மேலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
The Wanderers under a cloud cover at the moment ☁️
— BCCI (@BCCI) January 6, 2022
It is drizzling 🌧️ here on Day 4⃣
We will be back with LIVE updates #SAvIND pic.twitter.com/62pKNpaLJ5
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்தப் போட்டியை இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் அதேபோல் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க: மகளிர் உலகக்கோப்பை தொடருக்கு மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு !