Virat Kohli: புதிய ரெக்கார்டு... டக்-அவுட்டாவதில் சேவாக்கின் நம்பரை சமன் செய்த கோலி
முதல் போட்டியில் அரை சதம் கடந்திருந்த கோலி, இந்த போட்டியில் டக்-அவுட்டானது மட்டுமல்லாமல், ஒரு நாள் போட்டிகளில் டக்-அவுட்டான இந்திய பேட்டர்களின் பட்டியலில் புதிய இடத்தை எட்டி இருக்கிறார்.
![Virat Kohli: புதிய ரெக்கார்டு... டக்-அவுட்டாவதில் சேவாக்கின் நம்பரை சமன் செய்த கோலி IND vs SA 2nd ODI: Virat Kohli surpasses Rohit Sharma, Rahul Dravid in unwanted list following his five-ball duck Virat Kohli: புதிய ரெக்கார்டு... டக்-அவுட்டாவதில் சேவாக்கின் நம்பரை சமன் செய்த கோலி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/d02cb68bdc6a5c7c2918e97f8e2b3b7a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி பார்ல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற கேப்டன் ராகுல், பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருக்கிறது.
சிறப்பாக தொடங்கிய இந்திய அணி 63 ரன்கள் எட்டியபோது ஷிகர் தவன் அவுட்டாகினார். கடைசி போட்டியில் அரை சதம் கடந்திருந்த அவர், இந்த போட்டியில் 22 ரன்களுக்கு வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய கோலி, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், டக் அவுட்டாகி வெளியேறினார். ஐந்து பந்துகளை எதிர்கொண்ட அவர், கேஷவ் மஹாராஜ பந்துவீச்சில் டெம்பா பவுமாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முதல் போட்டியில் அரை சதம் கடந்திருந்த கோலி, இந்த போட்டியில் டக்-அவுட்டானது மட்டுமல்லாமல், ஒரு நாள் போட்டிகளில் டக்-அவுட்டான இந்திய பேட்டர்களின் பட்டியலில் புதிய இடத்தை எட்டி இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில், 14வது முறையாக கோலி டக்-அவுட்டாகி இருக்கிறார். இதன், மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் நம்பர் 1 முதல் 7வது இடத்திற்குள் களமிறங்கும் இந்திய பேட்டர்களில், அதிக முறை டக்-அவுட்டாகி இருக்கும் இந்திய வீரர் என்ற இடத்தை பிடித்திருக்கிறார். முதல் இடத்தை, சேவாக், ரெய்னா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.
அனைத்து ஃபார்மேட்களிலும், நம்பர் 1 முதல் 7வது இடத்திற்குள் களமிறங்கும் இந்திய வீரர்களில், சேவாக்கின் நம்பரை சமன் செய்த கோலி:
டெஸ்ட், ஒரு நாள், டி20 ஃபார்மெட்களில், மொத்தமாக டக்-அவுட்டாகி இருக்கும் இந்திய பேட்டர்கள்
34 முறை – சச்சின்
31 முறை – கோலி
31 முறை – சேவாக்
29 முறை – கங்குலி
26 முறை – யுவராஜ் சிங்
கோலி அவுட்டானதை அடுத்து தொடர்ந்து ஆடிய இந்திய பேட்டர்கள், 250-ஐ கடக்கவே திணறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் தாகூர் ரன் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தாகூர் 40* எடுக்க, அஷ்வின் 25* ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 287 ரன்கள் குவித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)